படையப்பா ரீ ரிலீஸ் தேதியை அறிவித்த சூப்பர் ஸ்டார் மகள்.. குஷியில் குதிக்கும் ரஜினிகாந்த் ரசிகர்கள்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த ஆண்டு 'படையப்பா' படத்தை ரீ ரிலீஸ் செய்யப்போவதாக செளந்தர்யா ரஜினிகாந்த் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை அறிவித்து ரஜினிகாந்த் ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளார்.
தளபதி விஜய்யின் கில்லி ரீ ரிலீஸ் எப்படி மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் சாதனையை படைத்ததோ அதே போல படையப்பா படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டால், தரமான சம்பவத்தை செய்வோம் என ரஜினிகாந்த் ரசிகர்கள் தொடர்ந்து சோஷியல் மீடியாவில் கோரிக்கை வைத்து வந்த நிலையில், ரசிகர்களுக்காக ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு இந்த ஆண்டு படையப்பா படம் மீண்டும் திரையரங்குகளை ஆட்சி செய்யப்போகிறது.

அடுத்த வாரம் கார்த்தியின் வா வாத்தியார் படம் திரைக்கு வரும் நிலையில், அதற்கு போட்டியாக படையப்பா ரீ ரிலீஸ் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
50 ஆண்டு ரஜினிஸம்: நடிகர் ரஜினிகாந்த் சினிமாவில் நடிக்க வந்து 50 ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து இந்த ஆண்டு கொண்டாடி வருகின்றனர். சமீபத்தில், கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. ரஜினிகாந்த் தனது இரு மகள்கள் மற்றும் குடும்பத்தினருடன் அங்கே சென்று கலந்துக் கொண்டு விருதை வாங்கிய காட்சிகள் எல்லாம் ரசிகர்களை கூஸ்பம்ப்ஸ் ஆக்கியது.
படையப்பா ரீ ரிலீஸ்: சூப்பர் ஸ்டார் நடித்த படங்களில் பாட்ஷா, முத்து, அருணாச்சலம், படையப்பா உள்ளிட்ட படங்கள் எவர்க்ரீன் சூப்பர் ஹிட் படங்கள் என்றே சொல்லலாம். அனைத்து தரப்பு ரசிகர்களும் இந்த படங்களை பார்த்து கொண்டாடியுள்ளனர். அதிலும், படையப்பா படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லியாக நீலம்பரியாக ரம்யா கிருஷ்ணன் நடித்த நடிப்பும் மறைந்த செளந்தர்யாவின் நடிப்பும் எல்லாவற்றுக்கும் மேலாக நடிகர் திலகம் சிவாஜியின் நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. பல முறை சன் டிவியில் எப்போது படையப்பா போட்டாலும் டிஆர்பியை எகிற விடும் நிலையில், வரும் டிசம்பர் 12ம் தேதி ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு படையப்பா படம் திரையரங்குகளில் வெளியாகப் போகிறது.
படையப்பா லுக்கில் விஜய்: சமீபத்தில், விஜய் ரசிகர்கள் படையப்பா லுக்கில் நடிகர் விஜய்யை வைத்து ஏஐ மூலம் எடிட் செய்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகின்றனர். இந்நிலையில், ஓஜி ஒரிஜினல் படையப்பாவே நவீன தொழில்நுட்பத்துடன் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளது.


Click it and Unblock the Notifications











