என் வழி தனி வழி… இணையத்தில் பட்டையை கிளப்பும் படையப்பா ஹேஷ்டேக்!

சென்னை : சன் தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு படையப்பா திரைப்படம் ஒளிபரப்பாகி வருகிறது. ரஜினியின் தீவிர ரசிகர்கள் #PadayappaOnSuntv என்ற ஹேஷ்டேக் ட்ராண்டாகி வருகிறது.

1999ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் படையப்பா. இந்தப் படத்தை இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கியிருந்தார்.

இதில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக மறைந்த நடிகை சவுந்தர்யா நடித்திருந்தார். ரஜினிக்கு வில்லியாக ரம்யா கிருஷ்ணன் நடித்தார்.

நடிகர் பட்டாளம்

நடிகர் பட்டாளம்

பெரும் வசூலை வாரிக்குவித்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், லட்சுமி, ராதாரவி, நாசர், செந்தில், மணிவண்ணன், அப்பாஸ், ரமேஷ் கண்ணா, வடிவுக்கரசி, பிரீதா என ஒரு பெரும் நடிகர் பட்டாளமே இந்த படத்தில் நடித்திருந்தது.

அட்டகாசமான நடிப்பு

அட்டகாசமான நடிப்பு

ஏஆர் ரஹ்மான் இசையில் பாட்டுகள் அனைத்தும் பட்டையை கிளப்பின. ரஜினிகாந்துக்கு போட்டியாக ரம்யா கிருஷ்ணனின் அட்டகாசமான நடிப்பு பெரும் பாராட்டை பெற்றது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது.

சன் தொலைக்காட்சியில்

சன் தொலைக்காட்சியில்

இந்நிலையில், படைப்பா திரைப்படம் ஞாயிற்றுக்கிழமையான இன்று 6.30க்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது என்போது போல ரஜினியின் ரசிகர்கள் டிவியின் முன் அமர்ந்து ரசித்து ரசித்து பார்த்து வருகின்றனர். ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ள இந்த நேரத்தில் படையப்பா படத்தை சன்டிவி ஒளிபரப்பி உள்ளதால் அவரின் ரசிகர்கள் அண்ணத்த மற்றும் #PadayappaOnSuntv என்ற ஹேஷ்டேக்கை ட்ராண்டாகி வருகிறது.

அண்ணன் தங்கை பாசம்

அண்ணன் தங்கை பாசம்

சிவா இயக்கத்தில் வெளியான வீரம், விஸ்வாசம் போன்று கூட்டு குடும்பப் பின்னணியில் அண்ணாத்த திரைப்படம் உருவாகி உள்ளது. அதில், அண்ணன்-தங்கை இப்படத்தில் பிரதானமாக இருக்கும். இதில் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜெகபதி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X