படையப்பா வெற்றி தான் மின்சார கண்ணா படத்தோட தோல்விக்கு காரணம்.. இயக்குனர் கே எஸ் ரவிக்குமார்!

சென்னை : தமிழ் சினிமாவிற்கு பல வெள்ளிவிழா படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உள்ளார் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார்

தமிழில் மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பல படங்களை இவர் இயக்கியுள்ளார்

இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் பேட்டியில் படையப்பா படத்தோட வெற்றி தான் மின்சார கனவு கண்ணா படத்தோட தோல்விக்கு காரணம் என கூறியுள்ளார்.

பாக்ஸ் ஆபீஸ் வெற்றிகளை

பாக்ஸ் ஆபீஸ் வெற்றிகளை

தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்ற மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக உள்ளார் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார். குறிப்பாக கமல்ஹாசன், ரஜினிகாந்த் என இப்போது உச்ச நடிகர்களாக உள்ளவர்களின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி பாக்ஸ் ஆபீஸ் வெற்றிகளையும் கொடுத்தவர் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார். குறிப்பாக ரஜினிகாந்துக்கு முத்து, படையப்பா என வெள்ளி விழா கொண்டாடி சாதனை படைத்த படங்களை இயக்கியுள்ளார்.

முழு மூச்சுடன் நடிப்பில் கவனம்

முழு மூச்சுடன் நடிப்பில் கவனம்

அதேபோல கமல்ஹாசனுக்கு அவ்வை சண்முகி, தசாவதாரம், பஞ்ச தந்திரம்,தெனாலி,மன்மதன் அம்பு உள்ளிட்ட படங்களை வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்

பெரும்பாலான முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ள கே எஸ் ரவிகுமார் தான் இயக்கும் படங்களில் ஒரு சில காட்சிகளில் வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இப்போது தமிழில் முழு மூச்சுடன் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

முதன்மை கதாபாத்திரத்தில் வயதான முதியவராக

முதன்மை கதாபாத்திரத்தில் வயதான முதியவராக

இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பல முகங்களைக் கொண்ட கேஎஸ் ரவிக்குமார் மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தின் தமிழ் ரீமேக்கை தயாரித்து வருகிறார். இவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சபரி மற்றும் சரவணன் இந்த படத்தை இயக்கி வருகின்றனர். கூகுள் குட்டப்பா என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தபடம் மிக விரைவில் ரிலீசாக உள்ளது. இதில் கே எஸ் ரவிக்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் வயதான முதியவராக நடித்துள்ளார்.

மின்சார கண்ணா படத்தோட தோல்விக்கு காரணம்

மின்சார கண்ணா படத்தோட தோல்விக்கு காரணம்

இந்த நிலையில் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த கேஎஸ் ரவிக்குமார் படையப்பாவின் வெற்றி மின்சார கண்ணாவுக்கு தோல்வியாக அமைந்தது என்று பேசியுள்ளார். படையப்பா மிகப் பெரிய வெற்றிப் படம் அதைத் தொடர்ந்து நான் விஜய்யை வைத்து படம் இயக்க போகிறேன் என்றதும் ரசிகர்கள் படையப்பா மாதிரி ஒரு மஸானா படத்தை என்னிடமிருந்து எதிர்பார்த்தார்கள். ஆனால் மின்சார கண்ணா முற்றிலும் வித்தியாசமான படம் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் என்பதால் மின்சார கண்ணா ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. படையப்பா படத்தில் இருந்த. மாஸ் மின்சார கண்ணா படத்துக்கு இல்லாதது அதன் தோல்விக்கு காரணம் என கே.எஸ் ரவிக்குமார் அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X