படையப்பா சித்தா முதல் லியோ சித்தா வரை.. அடேங்கப்பா எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்க!
சென்னை: சித்தார்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான சித்தா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிப் படமாக மாறியது. அந்த படத்தை சித்தார்த் தயாரித்து நடித்திருந்தார். சித்தார்த் படத்தை இயக்கிய அறிமுக இயக்குநர் அருண் குமார் அடுத்து திருத்தணியில் சியான் விக்ரமை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார்.
சித்தா படத்தில் சித்தப்பாவுக்கும் அண்ணன் மகளுக்குமான பாசம் தான் படத்தின் கதை. அதை வைத்து ஏகப்பட்ட ட்ரோல்களும் ரீக்ரியேஷன்களும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அதையெல்லாம் பீட் செய்யும் விதமாக தமிழ் சினிமாவின் சித்தாக்கள் என உருவாக்கப்பட்ட எடிட்டட் போட்டோக்கள் ரசிகர்களை குபீரென சிரிக்க வைத்து வருகிறது.

படையப்பா சித்தா: கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சிவாஜி, ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்த படையப்பா படத்தில் ரஜினிகாந்துக்கு சித்தப்பாவாக மணிவண்ணன் நடித்த நிலையில், ரஜினிகாந்தை பைக் முன்னாடி அமர வைத்து மணிவண்ணன் ஓட்டிக் கொண்டு செல்வது போல போட்டோ எடிட் போட்டு பங்கம் செய்துள்ளனர்.

பருத்திவீரன் சித்தா: அதே போல பருத்தி வீரன் படத்தில் கார்த்திக்கு சித்தப்பாவாக சரவணன் நடித்திருப்பார். அவர்கள் இருவர் போட்டோக்களையும் அப்படியே எடிட் போட்டு ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தி உள்ளனர். சித்தார்த்தின் சித்தா படத்தை வைத்து ஏகப்பட்ட வீடியோ மீம்கள், ரீல்ஸ்கள் உருவாக்கப்பட்டு வரும் நிலையில், இந்த போட்டோ எடிட்கள் டிரெண்டாகி வருகின்றன.

சித்தப்பா நேசமணி: விஜய், சூர்யா இணைந்து நடித்த பிரெண்ட்ஸ் படத்தில் வடிவேலுவின் காண்டிராக்டர் நேசமணி காமெடி வேறலெவலில் ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது. அந்த படத்தில் ரமேஷ் கண்ணாவின் சித்தப்பாவாக வடிவேலு நடித்த நிலையில், அவர்கள் இருவரையும் இந்த சித்தா டெம்பிளேட்டுக்குள் அடக்கி உள்ளனர்.

லியோ சித்தா: கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் சித்தப்பாவாக அர்ஜுன் நடித்திருந்தார். இந்நிலையில், அவரையும் விடாமல் லியோ சித்தா வெர்ஷனையும் எடிட் செய்து போட்டு இணையத்தை விழுந்து விழுந்து சிரிக்கை வைத்து வருகின்றனர்.
சுழல் சித்தா: சுழல் வெப்சீரிஸில் சித்தப்பாவை வில்லனாக காட்டியிருப்பார்கள். ஆனால், அதே போன்ற ஒரு கதையில் சித்தப்பாவை ஹீரோவாக காட்டி சித்தா படத்தை அருண் குமார் உருவாக்கி ஸ்கோர் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











