அக்சய் குமார் மாதிரி இருக்கும் ஹாலிவுட் பிரபலம்: டிரெண்டிங்கில் ஹவுஸ் ஆஃப்தி டிராகன் நடிகர்
மும்பை: கேம் ஆஃப் த்ரோன்ஸ் வெப் சீரிஸ், உலகம் முழுவதும் உள்ள ஓடிடி ரசிகர்களிடம் மிகவும் பிரபலமடைந்த தொடர்.
இந்தத் தொடரின் முந்தைய கதை ஹவுஸ் ஆஃப் தி டிராகன் என்ற தொடராக தற்போது வெளியாகி வருகிறது.
இதில் நடித்துள்ள ஹாலிவுட் நடிகர் பேடி கான்சிடைனை, இந்திய ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.

கேம் ஆஃப் த்ரோன்ஸ்
சர்வதேச அளவில் பலரையும் ஈர்த்த வெப் சீரிஸ் என்றால் அது கேம் ஆஃப் த்ரோன்ஸ் என எளிதாக சொல்லிவிடலாம். HBO தொலைக்காட்சியில் வெளியான இந்த தொடர், அதன் பின்னர் ஹாட்ஸ்டாரில் வெளியாகி சக்கைப் போடு போட்டது. பிரம்மாண்டமான மேக்கிங், அசாத்தியமான திரைக்கதை போன்றவற்றால் பல மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்தது இந்தத் தொடர்.

ஹவுஸ் ஆஃப் தி டிராகன்
கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடரில் வரும் டார்கேரியன்கள் குறித்து சொல்லவே வேண்டாம். டிராகன்களை கட்டுக்குள் வைத்திருக்கும் டார்க்கேரியன்கள் தான், கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடரின் ஹீரோக்கள் என ரசிகர்கள் கொண்டாடினர். இப்போது கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடரின் முந்தைய கதை என்னவென்பதை, டார்க்கேரியன்கள் பின்னணியில் இருந்து ஹவுஸ் ஆஃப் தி டிராகன் என்ற தொடர் உருவாகியுள்ளது.

ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு
கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடர் போன்றே மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ஹவுச் ஆஃப் தி டிராகன். இந்தத் தொடரின் முதல் சீசனின் முதல் எபிசோட் கடந்த வாரம் வெளியானது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது எபிசோட் இரு தினங்களில் வெளியாகிறது. இந்நிலையில் இந்தத் தொடரில் கிங் விசேரிஸ் கேரக்டரில் நடித்துள்ள பேடி கன்சிடைன், இந்தியளவில் டிரெண்ட் ஆகி வருகிறார்.

அக்சய் குமாரின் ஜெராக்ஸ்
ஹவுஸ் ஆஃப் தி டிராகன் தொடரில் இருந்து பேடி கன்சிடைனின் வீடியோக்களை ஷேர் செய்துள்ள நெட்டிசன்கள், இவர் பாலிவுட் நடிகர் அக்சய் குமார் மாதிரியே இருப்பதாக கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். தோற்றம் உட்பட அனைத்திலும் அக்சய் குமார் மாதிரியே இருக்கும் பேடி கன்சிடைனை நெட்டிசன்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். மேலும், டார்கேரியன் உலகத்தில் அக்சய் குமாருக்கு என்ன வேலை, அவர் எப்படி அங்கு சென்றார் எனவும் கேலியாக கமெண்ட்ச் செய்து வருகின்றனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











