எவ்ளோ முயற்சித்தும் காப்பாத்த முடியலையே.. படிக்காதவன் பட துணை நடிகர் பிரபு மறைவு.. டி. இமான் வேதனை

சென்னை: நாட்டாமை படத்தில் மிக்சர் காமெடியில் நடித்த லைட் மேன் இன்றளவும் மீம்களில் டிரெண்டாகி வருவது போல தனுஷின் படிக்காதவன் படத்தில் தங்கச்சியை பெண் பார்க்க வரும் மாப்பிள்ளையை நோக்கி ஃபேனை திருப்ப அவரது விக் கழண்டு விடும்.

அந்த கதாபாத்திரத்தில் நடித்த துணை நடிகர் பிரபு நேற்று சிகிச்சை பலனின்றி காலமானது திரையுலகை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Padikathavan fame actor Prabhu passed away due to cancer; D Imman done prabhus funeral

சினிமாவில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என பல பேர் பல்வேறு ஊரில் இருந்து சென்னைக்கு வருகின்றனர். ஆனால், அவர்கள் அத்தனை பேரின் கனவுகளும் நனவானதா என்றால் அது கேள்விக்குறி தான்.

ஒரு படத்தில் ஒரு காட்சியில் வந்து விட்டால் கூட தங்கள் லட்சியத்தில் சாதித்து விட்டதாக பலரும் அந்த கனவுத் தொழிற்சாலையை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றனர்.

சிலர் 100 கோடிக்கு மேல் சம்பளத்தையும் செட்டிலான சொகுசு வாழ்க்கையையும் அடைந்து வரும் நிலையில், பல லட்சம் பேர் சினிமா வாழ்க்கையை எண்ணி தங்கள் வாழ்க்கையை தொலைத்து வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாடுவது தான் நிதர்சனமான உண்மையாக உள்ளது.

அதிலும், சிலருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைத்து விட்டால், அதனை கொண்டாட வேண்டும் என்று குடிப்பழக்கத்துக்கும், மற்ற கெட்டப் பழக்கத்துக்கும் அடிமையாகி வாழ்க்கையை தொலைத்து விடுவதும் உண்டு.

சினிமா வாய்ப்புகள் கிடைக்கத் தொடங்கிய நிலையில், துணை நடிகர் பிரபு குடிப்பழக்கத்துக்கு ஆளாகி தனது உடல்நிலையை கெடுத்துக் கொண்டார் என்கின்றனர்.

Padikathavan fame actor Prabhu passed away due to cancer; D Imman done prabhus funeral

வறுமையில் வாடி வந்த துணை நடிகர் பிரபுவுக்கு உதவி செய்ய யாருமே முன் வராத நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரபுவின் நிலை குறித்து யூடியூப் சேனல் ஒன்று வெளியிட்ட பேட்டி வீடியோவை பார்த்த இசையமைப்பாளர் டி. இமான் அவரது சிகிச்சைக்காக உதவி செய்து வந்த நிலையிலும், துணை நடிகர் பிரபு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இந்நிலையில், இசையமைப்பாளர் டி. இமானே துணை நடிகர் பிரபுவுக்கு இறுதிச்சடங்கு செய்து வைத்த சம்பவம் ரசிகர்களை உருக வைத்துள்ளது.

படிக்காதவன் படத்தில் நடித்த துணை நடிகர் பிரபுவின் மறைவை அறிந்து சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X