பத்மப்பிரியாவுக்கு ஆபாச மெயில்-வாத்தியார் கைது
நடிகை பத்மப்பிரியாவுக்கு ஆபாச இ-மெயில் அனுப்பிய கேரள ஆசிரியர் பிடிபட்டார். அவரை போலீஸார்கைது செய்தனர்.
தவமாய் தவமிருந்து பட நாயகி பத்மப்பிரியா இப்போது மலையாளப் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.இவரும் கேரளத்தைச் சேர்ந்தவர் தான். பெங்களூரில் சில காலம் வசித்தவர். மும்பையில் மாடலிங்கில் இருந்தவர்.இவரை சேரன் தமிழ் சினிமாவுக்குக் கொண்டு வந்தார். இப்போது தமிழில் வாய்ப்புக்கள் இல்லாததால்தாய்மொழியான மலையாளத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் மலையாளப் பட ஷூட்டிங்குக்காக கோட்டயம் அருகே உள்ள மன்னார்காடு பகுதிக்கு பத்மாசென்றிருந்தபோது அந்த ஊரைச் சேர்ந்த ஆசிரியர் வினோத் என்பவர் அறிமுகமானார்.
உங்களது தீவிர ரசிகர் என்று வினோத் கூறியதால் சந்தோஷமடைந்த பத்மப்பிரியா அவருடன் நன்கு பழகினார்.இதையடுத்து அடிக்கடி பத்மப்பிரியாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வந்தார் வினோத்.
பத்மப்பிரியா தன்னுடன் நன்கு பேசுவதை தவறாக எடுத்துக்கொண்ட வினோத், அவருக்கு ஆபாசஇ-மெயில்களை அனுப்ப ஆரம்பித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பத்மா, கோபமடைந்து, இதுபோல இனிமேல்அனுப்பாதீர்கள், என்னுடனும் பேசாதீர்கள் என்று கூறி விட்டார்.இருந்தாலும் வினோத் இ-மெயில்களை அனுப்புவதை நிறுத்தவில்லை. அவரது ஆபாசம் தொடர்ந்தது.இதையடுத்து கோட்டயம் எஸ்.பி ஸ்ரீஜத்திடம் புகார் கொடுத்தார் பத்மா.
இதைத் தொடர்ந்து போலீஸார் வினோத்தை கைது செய்தனர்.


Click it and Unblock the Notifications