twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பத்ம விருதுகளில் புறக்கணிக்கப்பட்ட தென்னிந்திய சினிமா கலைஞர்கள்.. பிரபல தயாரிப்பாளர் அப்செட்!

    |

    சென்னை: பல துறைகளில் சாதித்த இந்தியர்களை கெளரவப்படுத்தும் விதமாக பத்ம விருதுகள் வழங்கப்படுவது வழக்கம்.

    இந்த ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிப்பு நேற்று மாலை அறிவிக்கப்பட்டது.

    Padma Awards 2020: Royal ignore of South film industry – Bofta Dhananjayan

    இதில், பாலிவுட் சினிமா பிரபலங்களான கங்கனா ரனாவத், கரண் ஜோஹர் மற்றும் ஏக்தா கபூர் போன்ற பிரபலங்களுக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன.

    ஆனால், தென்னிந்திய சினிமாவை சேர்ந்த ஒரு பிரபலத்திற்கு கூட இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்படவில்லை.

    இது குறித்து பிரபல தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான பாஃப்டா தனஞ்செயன் "Royal ignore of South film industry" என ட்வீட் போட்டுள்ளார்.

    ஹேமந்த் குமார் என்பவர் 2020ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிப்பில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒரு தென்னிந்திய சினிமா துறை கலைஞர்கள் பெயரும் இடம்பெறவில்லை ஏன் என கேள்வி எழுப்பியதற்கு, பதிலளித்த தனஞ்செயன், தென்னிந்திய சினிமாவை மொத்தமாக மறந்துவிட்டனர் என பதிலளித்துள்ளார்.

    பிரம்மாண்டமாக அரங்கேறியது பிரம்மாண்டமாக அரங்கேறியது "83" படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட்டு விழா

    இதற்கு முன்னதாக அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளின் போதும் தமிழ் சினிமா கலைஞர்கள் பெரியளவி புறக்கணிக்கப்பட்டனர் என சர்ச்சைகள் கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Padma Awards 2020 majorly ignore South Indian Cinema Industry Celebrities. Bofta Dhananjayan said, it’s a Royal ignore of South film industry.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X