Padma Awards : மம்மூட்டிக்கு பத்ம பூஷண்.. மாதவனுக்கு பத்ம ஸ்ரீ.. பூரித்து போன கமல்ஹாசன்.. போஸ்ட்டை பாருங்க!
டெல்லி: குடியரசு தினத்தை முன்னிட்டு, உள்துறை அமைச்சகம் (MHA) 2026 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதைப் பெறுபவர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. கலை, இலக்கியம், சமூக சேவை, மருத்துவம், கல்வி, பொதுச் சேவை போன்ற துறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களை இந்த விருதுகள் அங்கீகரிக்கின்றன.
விருதுப் பெறுநர்களின் பெயர்கள் குடியரசு தினத்திற்கு முன்பே அறிவிக்கப்பட்டாலும், இந்த ஆண்டு இறுதியில் டெல்லி ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரௌபதி முர்மு பதக்கங்களை வழங்குவார். உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பத்ம விருதுகள் பட்டியலில், கடந்த ஆண்டு நவம்பர் 24 அன்று தனது 89 வயதில் காலமான மூத்த நடிகர் தர்மேந்திர சிங் தியோலுக்கு, மறைவுக்குப் பிந்தைய பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்ம பூஷண் விருது மலையாள நடிகர் மம்மூட்டி மற்றும் பாலிவுட் பின்னணிப் பாடகி அல்கா யாக்னிக் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நடிகர் மாதவன், பெங்காலி ஜாம்பவான் புரோசென்ஜித் சாட்டர்ஜி, மூத்த தொலைக்காட்சி, திரைப்பட நடிகர் சதீஷ் ஷா (மறைவுக்குப் பின்) ஆகியோருக்குப் பத்மஸ்ரீ வழங்கப்படுகிறது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நடிகர் மம்மூட்டிக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டதும் நடிகரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துக் குறிப்பில், “என்னுடைய பிரியத்துக்குரிய நண்பர் மம்மூட்டி அவர்களுக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் இருவரும் சேர்ந்து நடித்ததில்லை. ஆனால், நான் அவரையும் அவர் என்னையும் தூர இருந்து ரசித்தும் ஒருவருக்கொருவர் நேரடியாக விமர்சித்துக்கொண்டும் ஒரு 'கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார்' நட்பை நீண்ட நாட்களாகப் பேணி வருகிறோம்.

ரசிகன் கமல்ஹாசன்: நாங்கள் இருவரும் இன்னும் கொஞ்சம் அதிகமாக நேரில் சந்தித்துக்கொண்டிருக்கலாமே என்று இப்போது தோன்றுகிறது. என்னுடைய ரசிகர்கள் அவருடைய ரசிகர்களாகவும் இருக்க வேண்டும் என்பதே ஒரு மம்மூட்டி ரசிகனாக என்னுடைய எதிர்பார்ப்பு. நண்பன் மம்மூட்டி, இப்போது பத்ம பூஷன் மம்மூட்டியாகி இருக்கிறார். நண்பனுக்கு வாழ்த்து” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
வாழ்த்து: மம்மூட்டிக்கு இந்தியா முழுவதும் உள்ள திரைப்பிரபலங்கள் தொடங்கி, அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். தமிழ் சினிமா நடிகர் மாதவனுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் தொடங்கி, திரைப்பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











