பத்ம பூஷன் விருது வென்ற அஜித்..பிரைவேட் ஜெட், லம்போகினி கார்.. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

சென்னை: குடியரசு தினத்தை முன்னிட்டு 139 பேருக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த தொழிலதிபர் நல்லி குப்புசாமி, நடிகர் அஜித்குமார், நடிகை ஷோபனா, ஆந்திராவை சேர்ந்த நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா உள்ளிட்ட 19 பேருக்கு பத்ம பூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பறை இசைக் கலைஞர் வேலு ஆசான் உள்ளிட்ட 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ் சினிமாவில் ஹீரோவாக கலக்கி வந்த அஜித்குமார், ஹீரோவாக நடிப்பது மட்டுமின்றி கார் ரேஸில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் துபாயில் நடந்த கார் ரேஸில் அவர் 3ம் இடம் பிடித்து இருந்தார். இதனால் அவருக்கு சினிமா நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள் ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர். இப்போது, மத்திய அரசு, இன்று நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருதை அறிவித்து இருக்கிறது. Art பிரிவில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் 3வது உயரிய விருது இதுவாகும்.

ajithkumar padma bhushan networth

அஜித்திற்கு விருது: மத்திய அரசு இந்த விருதை அஜித் குமாருக்கு வழங்கி இருப்பதற்கு, சினிமா நட்சத்திரங்கள், ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இதனால், ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வரும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு குறித்த தகவல் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.. அதன்படி, ஒரு படத்தில் நடிக்க அஜித் குமார் ரூ100 கோடி வாங்கி வந்த நிலையில் துணிவு படத்திற்கு பிறகு அவரின் சம்பளம் ரூ.150 கோடியாக அதிகரித்தது. ரூ 25 கோடியில் சொந்தமாக பிரைவேட் ஜெட், கார் பிரியரான அஜித்திடம் Porsche GT3 RS, Ferrari SF90, BMW 740Li, Mercedes-Benz 350 GLS, 34 கோடி ரூபாய் மதிப்புள்ள Lamborghini சொகுசு காரும் உள்ளது.

சொத்து மதிப்பு: இதை தவிர அஜித்திற்கு சென்னையில் பல கோடி மதிப்புள்ள ஆடம்பர பங்களா ஒன்றும், துபாயில் அண்மையில் ஒரு வீட்டையும் அஜித் வைத்து இருக்கிறார்.இது மட்டுமில்லாமல் ஷாலினி படங்களில் ஹீரோயினாக நடித்த சமயத்தில் ஒரு படத்திற்கு 50 லட்சம் ரூபாய் சம்பளமாக பெற்று வந்தார். குழந்தை நட்சத்திரமாக, கதாநாயகியாக பல படத்தில் நடித்துள்ளார். இவரின் சொத்தையும் சேர்த்து அஜித் குமாரின் சொத்து மதிப்பு ரூ.350 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

விடாமுயற்சி, குட் பேட் அக்லி: தற்போது அஜித் குமார், மகிழ் திருமேனி காம்போவில் உருவாகி உள்ள விடாமுயற்சி படத்தில் நடித்து முடித்துள்ளார்.. லைகா தயாரிப்பில் அனிருத்தின் இசையில் உருவான இப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன், ஆரவ் என பலர் நடித்திருக்கின்றனர். துணிவு படத்திற்கு பிறகு அஜித்தின் எந்த படமும் வெளியாகாத நிலையில், விடாமுயற்சி படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில், இப்படம் பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அஜித் குட் பேட் அக்லி படத்தில் நடித்துள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருக்கும் இப்படம், தமிழ் புத்தாண்டுக்கு வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போய் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X