அதுக்குள்ள 50 வயசாகிடுச்சு.. எனக்கென்னமோ 30 வயசு ஆகுற ஃபீல் தான்.. பிகினியில் பத்மா லக்ஷ்மி!
சென்னை: நடிகை, எழுத்தாளர், சூப்பர் மாடல் என பன்முகத் தன்மை கொண்டுள்ள பத்மா லக்ஷ்மி தனது 50வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்.
Recommended Video
பிறந்தநாள் அதுவுமா பிகினி உடை அணிந்து கடற்கரையில் அவர் எடுத்துக் கொண்ட ஹாட் புகைப்படத்தை ஷேர் செய்து வைரலாக்கி வருகிறார்.
50 வயதிலும் இவ்வளவு ஹாட்டா இருக்கீங்களே என ரசிகர்கள் வியந்து, வாழ்த்தி வருகின்றனர்.

பத்மா லக்ஷ்மி பிறந்தநாள்
சென்னையில் பிறந்து, அமெரிக்காவில் செட்டில் ஆகியிருக்கும் பாலிவுட் நடிகை பத்மா லக்ஷ்மிக்கு 50 வயதாகி விட்டது. 1970ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி பிறந்த பத்மா லக்ஷ்மி தனது பிறந்தநாளை முன்னிட்டு கடற்கரையில் பிகினி உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு இணையத்தின் சூட்டை அதிகரித்துள்ளார்.

கடலில் செம கொண்டாட்டம்
பிங்க் நிற பிகினி அணிந்து கொண்டு, பிறந்தநாள் அதுவுமா பச்சை புள்ளையாகவே மாறியுள்ளார் பத்மா லக்ஷ்மி. கடலில் நனைந்து விளையாடும் அவரது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், வயதானவர் என்றும் பாராமல் ஜொள்ளு விட்டு வருகின்றனர். அந்த அளவுக்கு அவரும் ஹாட்னஸில் இளம் பெண்களுக்கு டஃப் போட்டி கொடுக்கும் விதமாகவே உள்ளது தான் சிறப்பு.

50 அல்ல 30
அதுக்குள்ள 50 வயசாகிடுச்சு என்று ஃபீல் பண்ணும் அவர், ஆனால், தனக்கு என்னவோ வெறும் 30 வயது தான் ஆகிறது என்ற எண்ணம் உள்ளதாகவும் ட்வீட் போட்டுள்ளார். இப்போது தான் வாழ்க்கை ஆரம்பித்தது போலவும் தான் உணர்வதாக பதிவிட்டு, பலருக்கும் ஒரு இன்ஸ்பிரேஷனாக திகழ்கிறார் நம்ம பத்மா லக்ஷ்மி.

கன்ஃப்யூஸ்
அமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்த பிரபல செய்தி நிறுவனம் சமீபத்தில் நடிகை பிரியங்கா சோப்ராவின் படத்திற்கு பதிலாக பத்மா லக்ஷ்மியின் புகைப்படத்தை பதிவிட்டது உலகளவில் பெரிய சர்ச்சையையே கிளப்பியது குறிப்பிடத்தக்கது. பிகினியில் மட்டுமின்றி, டாப்லெஸ் ஆகவும், நிர்வாணமாகவும் இவர் பதிவிடும் புகைப்படங்கள் எல்லாம் வேற லெவலில் வைரலானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











