twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கண்ணா பத்மாவத் வெறும் பார்ட் 2 தான்: பார்ட் ஒன் எது தெரியுமா? #தமிழன்டா

    By Siva
    |

    Recommended Video

    100 கோடி கிளப்பில் இணையும் 'பத்மாவதி'

    சென்னை: ராணி பத்மினி பற்றி 45 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு படம் வெளியாகியுள்ளது.

    ராணி பத்மினியின் வாழ்க்கை வரலாற்று படமான பத்மாவதிக்கு கர்னி சேனா உள்ளிட்ட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பத்மாவதி செட்டை தாக்கி சேதப்படுத்தினார்கள். இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியை கன்னத்தில் அறைந்தார்கள்.

    தீபிகா, பன்சாலியின் தலையை வெட்டிக் கொண்டு வருபவர்களுக்கு கோடிக் கணக்கில் பணம் பரிசாக வழங்கப்படும் என்றார்கள்.

    ரிலீஸ்

    ரிலீஸ்

    கர்னி சேனா உள்ளிட்ட அமைப்பினரின் போராட்டத்தால் பத்மாவதி என்ற பெயரை பத்மாவத் என்று மாற்றி ரிலீஸ் செய்தனர். அப்படியும் அந்த அமைப்பினர் அடங்கவில்லை. ராணி பத்மினியை அவமதித்துவிட்டதாக தொடர்ந்து கூறி வருகிறார்கள்.

    வைஜெயந்தி மாலா

    வைஜெயந்தி மாலா

    ராணி பத்மினியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து 1963ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9ம் தேதி தமிழில் வெளியான படம் சித்தூர் ராணி பத்மினி. ராணி பத்மினியாக வைஜெயந்திமாலா நடித்திருந்தார்.

    கில்ஜி

    கில்ஜி

    பத்மினியின் கணவர் பீம்சிங்காக சிவாஜி கணேசனும், அரக்க குணம் கொண்ட மன்னன் அலாவுத்தீன் கில்ஜியாக டி.எஸ்.பாலையாவும் நடித்திருந்தனர்.

    விமர்சனம்

    விமர்சனம்

    வைஜெயந்திமாலா என்பதால் படத்தில் நாட்டியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருந்தனர். புனிதமான ராணியை நாட்டிய ராணியாக காட்டியுள்ளனர் என்று அப்பொழுது விமர்சனம் எழுந்தது.

    பிரச்சனை

    பிரச்சனை

    பத்மாவதி படம் போன்று சித்தூர் ராணி பத்மினிக்கு எந்த எதிர்ப்பும் கிளம்பவில்லை. படத்தில் சிவாஜி, வைஜெயந்திமாலா என்று பலர் இருந்தும் அது ஓடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Chittoor Rani Padmini movie which hit the screens in the year 1963 was based on queen Padmini. Unlike Padmaavat controversies, Chittoor Rani Padmini got released without any issue.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X