twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தப்பா சித்தரிக்கலீங்க.. வேணும்னே பண்ணலீங்க.. அட நான் படமே எடுக்கலீங்க..! #Padmaavat

    By Vignesh Selvaraj
    |

    Recommended Video

    தீபிகாவின் மூக்கின் விலை கோடிக்கணக்கில்- வீடியோ

    சென்னை : சஞ்சய் லீலா பன்சாலியின் 'பத்மாவத்' திரைப்படம் பலத்த சர்ச்சைகளுக்கிடையே இன்று நாடு முழுவதும் வெளியானது.

    இந்தப் படத்தில் ராஜபுத்திரர்களையும், ராணி பத்மாவதியையும் தவறாகச் சித்தரித்திருப்பதாக ராஜபுத்திர சமூகத்தினர் குற்றம் சாட்டினர்.

    சென்சாரில் பல காட்சிகள் கட் செய்யப்பட்டு, மிகுந்த எச்சரிக்கையோடு பல டிஸ்கிளைமர்களோடு வெளியாகி இருக்கிறது 'பத்மாவத்'.

    பத்மாவத்

    பத்மாவத்

    ராஜபுத்திரர் வம்சத்தினர் வட மாநிலங்களில் பல இடங்களில் 'பத்மாவத்' திரைப்படத்திற்கு எதிராக போராட்டங்களிலும், வன்முறைகளிலும் ஈடுபட்டதால் சில மாநில அரசுகளே படத்தை வெளியிட தடை விதித்திருந்தன.

    தடை நீக்கம்

    தடை நீக்கம்

    சென்சார் போர்டு அனுமதி அளித்தபின்பும் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி படத் தயாரிப்பாளர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததையடுத்து, தடையை நீக்கி உத்தரவிட்டனர் நீதிபதிகள்.

    போராட்டம்

    போராட்டம்

    உச்சநீதிமன்றம் தடையை நீக்கிய பின்பும், குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய இடங்களில் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால், மிகுந்த எச்சரிக்கையோடும், பாதுகாப்பு உணர்வோடும் படத்தை ரிலீஸ் செய்திருக்கிறார்கள்.

    எத்தனை டிஸ்கிளைமர்?

    எத்தனை டிஸ்கிளைமர்?

    ரசிகர்களிடையே தவறான புரிதல்கள் ஏற்பட்டு படத்திற்கு சிக்கல்கள் உருவாகிவிடக்கூடாது என்பதற்காக 'பத்மாவத்' திரைப்படத்தில் டைட்டில் கார்டுக்கு முன்பு மூன்று டிஸ்கிளைமர் கார்டுகளையும் போடுகிறார்கள்.

    கவிதையின் தழுவல்

    கவிதையின் தழுவல்

    'பத்மாவத்' திரைப்படம் கவிஞர் மாலிக் முகமது ஜெய்சியின் கவிதையை தழுவி எடுக்கப்பட்டிருப்பதாகவும், இப்படத்தில் ராஜபுத்திரர்கள் தவறாகச் சித்தரிக்கப்படவில்லை எனவும் உறுதியளித்திருக்கிறார்கள்.

    எல்லாம் கற்பனையே

    எல்லாம் கற்பனையே

    'பத்மாவத்' படத்தில் வரும் காட்சிகள், காட்டப்படும் கதாபாத்திரங்கள், அவர்களின் கலாசாரம், சமூகம், போர்க்காட்சிகள் எல்லாமே உண்மைச் சம்பவத்தைக் குறிப்பிடவில்லை. எல்லாமே கற்பனையே எனவும் ஒரு டிஸ்கிளைமரில் குறிப்பிடுகிறார்கள்.

    கருணாஸ் - தனுஷ்

    கருணாஸ் - தனுஷ்

    பத்மாவதி படத்தில் ராஜபுத்திரர்கள் தவறாகக் காட்டப்படவில்லை... இது உண்மைச் சம்பவம் இல்லை... காட்சிகள் எதையும் குறிப்பிடுபவை இல்லை என வரிசையாக பின்வாங்குவதைப் பார்க்கும்போது, 'யாரடி நீ மோகினி' படத்தில் கருணாஸ், நயன்தாராவிடம் போன் செய்து தனுஷின் காதலைச் சொல்லும் காட்சி நினைவில் வந்து போகும். அந்தப் படத்தில் "நான் அவனோட ஃப்ரெண்டு இல்லீங்க.. நான் உங்களுக்கு போன் பண்ணவே இல்லீங்க.. அட நான் போலீசே இல்லங்க. கூர்க்காங்க" என டரியல் ஆவார் கருணாஸ்.

    சதியை ஆதரிக்கவில்லை

    சதியை ஆதரிக்கவில்லை

    'சதி' எனும் பிற்போக்குத்தனத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கில் இந்தப் படம் எடுக்கப்படவில்லை எனவும் ஒரு டிஸ்கிளைமரை போடுகிறார்கள். இந்த டிஸ்கிளைமர் இல்லையெனில் பெரும் எதிர்ப்பை இப்படம் சந்திக்க வேண்டியது இருந்திருக்கும்.

    ராஜபுத்திர பெண்கள்

    ராஜபுத்திர பெண்கள்

    இந்தப் படத்தில் கணவன் மாண்டதால், மாற்றானின் நிழல் கூடத் தன் மீது படக்கூடாது என ராஜபுத்திரப் பெண்கள் அனைவரும் பெருந்தீ ஒன்றை மூட்டி அதில் புகுந்து தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வதாகக் காட்சி இடம்பெற்றிருக்கிறது.

    English summary
    Sanjay Leela Bhansali's 'Padmaavat' was released across the country. Bhansali was accused by rajputs in some states. In the movie 'Padmaavat', three disclaimers are put before the title card to avoid misunderstandings among fans.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X