பிரமாண்ட இயக்குனர் தலையில் இடியை இறக்கிய ஃபேஸ்புக் லைவ்
Recommended Video

மும்பை: பெரும் சர்ச்சைக்குள்ளான பத்மாவத் படம் ஃபேஸ்புக் லைவில் லீக் செய்யப்பட்டுள்ளது.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, ஷாஹித் கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ள பத்மாவத் படம் பெரும் சர்ச்சைக்கு நடுவே ரிலீஸாகியுள்ளது.
படத்தை எதிர்த்து குருகிராமில் பெரும் போராட்டம் வெடித்துள்ளது.

போராட்டம்
பத்மாவத் படத்தை எதிர்த்து குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பீகாரில் போராட்டம் பெரிய அளவில் நடந்து வருகிறது. இத்தனை போராட்டங்களுக்கு இடையே ரிலீஸான பத்மாவத் சமூக வலைதளத்தில் லீக் ஆகியுள்ளது.

படம்
கர்னி சேனா உள்ளிட்ட சில அமைப்புகள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்க பத்மாவத் படம் ஃபேஸ்புக் லைவில் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து அறிந்து படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.

லைக்ஸ்
ஜாதோன் கா அட்டா என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் தான் பத்மாவத் படம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த லிங்கை 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஷேர் செய்துள்ளனர். லட்சக்கணக்கானோர் படத்தை ஃபேஸ்புக்கில் பார்த்துள்ளனர்.

தள்ளிவைப்பு
டிசம்பர் 1ம் தேதியே பத்மாவத் ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் கர்னி சேனா உள்ளிட்ட அமைப்புகள் படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்ததால் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











