twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மாநில அரசுகளை கண்டித்த சுப்ரீம் கோர்ட்... 'பத்மாவதி' படத்தின் மீதான தடை நீக்கம்!

    By Vignesh Selvaraj
    |

    Recommended Video

    'பத்மாவத்' தடைக்கு எதிராக வழக்கு!

    சென்னை : சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஷாகித் கபூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும்'பத்மாவதி' திரைப்படம் 'பத்மாவத்' என டைட்டில் மாறியிருக்கிறது.

    சித்தூர் ராணி பத்மாவதி, முகலாய மன்னன் அலாவுதீன் கில்ஜியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் பத்மாவதியை தவறாக சித்தரித்துள்ளதாகக் கூறி ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    சென்சார் போர்டு அனுமதித்தும், பல்வேறு மாநில அரசுகள் படத்திற்கு தடை விதித்தன. இந்நிலையில் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை சுப்ரீம் கோர்ட் அதிரடியாக நீக்கியுள்ளது.

    'பத்மாவதி' முடக்கம்

    'பத்மாவதி' முடக்கம்

    சித்தூர் மகாராணி பத்மாவதி வாழ்க்கையை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் பத்மாவதியை தவறாக சித்தரித்துள்ளதாக கூறி இப்படத்திற்கு ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த டிசம்பர் மாதமே வெளியாக வேண்டிய படம் முடங்கியது.

    பத்மாவத்

    பத்மாவத்

    பல்வேறு காட்சிகளை நீக்கும் உத்தரவுடன் சென்சார் போர்டு இந்தப் படத்துக்கு யு/ஏ தணிக்கை சான்றிதழ் அளித்தது. அதோடு படத்தின் பெயரும் மாற்றப்பட்டு 'பத்மாவத்' என்ற பெயரில், வருகிற ஜனவரி 25-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

    நீடிக்கும் தடை

    நீடிக்கும் தடை

    அதேநேரத்தில், இந்தப் படத்தை வெளியிடுவதற்கு கர்னி சேனா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்து எதிர்த்து தெரிவித்து வருகின்றனர். இதனால் ராஜஸ்தான், குஜராத், ஹரியானா, மத்திய பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களில் இப்படத்தை திரையிடப்போவது இல்லை என அந்தந்த மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

    வழக்கு விசாரணை

    வழக்கு விசாரணை

    இதை எதிர்த்து பத்மாவத் தயாரிப்பாளர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, 4 மாநிலங்களில் விதிக்கப்பட்ட தடையை நீக்கினார்.

    மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்

    மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்

    அதோடு, பிற மாநிலங்களும் பத்மாவத் படத்திற்கு தடை விதிக்கக்கூடாது எனவும் உத்தரவிட்டார். மேலும் படங்களுக்கு மாநில அரசுகள் தடை விதிப்பது அடிப்படை கட்டமைப்புகளை சீரழிக்கும். பிரச்னை என்றால் சம்பந்தப்பட்டவர்கள் தீர்ப்பாயம் செல்ல வேண்டுமே தவிர தடை விதிக்கக்கூடாது என்று அறிவுறுத்தினார்.

    ஜனவரி 25 ரிலீஸ்

    ஜனவரி 25 ரிலீஸ்

    சுப்ரீம் கோர்ட்டின் இந்த அதிரடி உத்தரவால் திட்டமிட்டபடி படம் ஜனவரி 25-ம் தேதி ரிலீஸாகிறது. ஏற்கெனவே விதிக்கப்பட்டிருந்த தடையால், தமிழ் மற்றும் தெலுங்கில் மட்டும் இந்த தேதியில் ரிலீஸ் ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Producer of 'Padmaavat' filed a case in Supreme Court against ban on padmaavat in 4 states. This case came to the hearing today. The judge examined the case and removed the ban imposed in 4 states.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X