twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பேட்மேன் தமிழ் ரீமேக்கில் தனுஷ் நடிக்க வேண்டும் - ரியல் ஹீரோ அருணாச்சலம் முருகானந்தம்

    தேசிய விருதை வென்ற பேட்மேன் படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டால் அதில் தனுஷ் நடிக்க வேண்டும் அருணாச்சலம் முருகானந்தம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    |

    சென்னை: பேட்மேன் திரைப்படம் தேசிய விருது வென்றது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக ரியல் ஹீரோ அருணாச்சலம் முருகானந்தம் கூறியுள்ளார். பேட்மேன் படம் தமிழ் மொழியில் ரீமேக் செய்யப்படும் போது அதில் நடிகர் தனுஷ் நடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    மலிவு விலையில் நாப்கின் தயாரிக்கும் இயந்திரங்களை கண்டுபிடித்து ஏழை பெண்களும் நாப்கின் உபயோகிக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் தமிழரான அருணாச்சலம் முருகானந்தம். கோவையைச் சேர்ந்த இவரது சேவையை பாராட்டி மத்திய அரசு பத்மஸ்ரீ விருது கொடுத்து கவுரவித்துள்ளது.

    மாதவிடாய் காலங்களில் பெண்கள் பயன்படுத்தும் நாப்கினை வியாபார நோக்கத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். நாப்கின் விளம்பரம் வராத தொலைக்காட்சி சேனல்களே இல்லை. பன்னாட்டு நிறுவனங்கள் விளம்பரங்களுக்கு ஆகும் செலவையும் சேர்த்து விலையை நிர்ணயிக்கின்றனர். இதனால் நாப்கின்களின் விலையைக் கண்டு மலைக்கும் கிராமப்புறப் பெண்கள் நாப்கின்களைப் பயன்படுத்த முடியாமல் துணிகளைப் பயன்படுத்துகின்றனர். இதனால் சுகாதாரம் கேள்விக்குறியாகிறது.

    மலிவுவிலை நாப்கின்

    மலிவுவிலை நாப்கின்

    இந்தியாவில் இன்று வரை சுமார் 70% பெண்கள் மாதவிடாய் காலத்தில் சுகாதாரமான நாப்கின்களைப் பயன்படுத்துவதில்லை என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தன் மனைவிக்கு உதவுவதற்காக இயற்கை முறையில் விலை மலிவான நாப்கின்களை உருவாக்க விரும்பினார். பெரு முயற்சிக்குப் பிறகு அதைச் செயல்படுத்தினார்.

    நாப்கின் இயந்திரங்கள்

    நாப்கின் இயந்திரங்கள்

    இதைச் சாதிப்பதற்குள் அவர் பட்ட கஷ்டங்களும் அவமானங்களும் மிக அதிகம். பாதுகாப்பான முறையில் பெண்கள் பயன்படுத்தும் வகையில் தானே பரிசோதனைகளையும் ஆராய்ச்சியையும் செய்து நாப்கின் தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்தார். தற்போது ஜெயஸ்ரீ இண்டஸ்ட்ரிஸ் என்ற பெயரில் மிகவும் மலிவான விலையில் நாப்கின்களைத் தயாரித்து நாடு முழுவதுமுள்ள கிராமப்புற பெண்களுக்கு விற்றுவருகிறார்.

    நாடுமுழுவதும் நாப்கின் இயந்திரங்கள்

    நாடுமுழுவதும் நாப்கின் இயந்திரங்கள்

    மாதவிடாய் காலத்தில் கிராமப்புறங்களில் உள்ள பெண்கள் சுகாதாரமற்ற முறையில் பயன்படுத்தும் துணிகளினால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய அவர், தனது நாப்கின் தயாரிக்கும் இயந்திரத்தை நாடு முழுவதும் நிறுவியுள்ளார். 106 நாடுகளுக்கு அந்த இயந்திரங்களை நிறுவவும் திட்டமிட்டுள்ளார். மகளிர் அமைப்புகள், பள்ளிகள், பொதுநல சேவை அமைப்புகள் போன்றவற்றிற்கு லாபமின்றி இயந்திரம், மூலப்பொருட்கள் வழங்கி பயிற்சி அளிக்கிறார்.

    உலகின் சக்தி வாய்ந்த மனிதர்கள்

    உலகின் சக்தி வாய்ந்த மனிதர்கள்

    சுமார் ஒரு கோடிப் பெண்கள் இவரின் சுகாதாரமான நாப்கின்களை குறைந்த விலையில் உபயோகிக்கிறார்கள். உலகின் சக்தி வாய்ந்த 100 நபர்களில் ஒருவராக இவரை டைம் பத்திரிக்கை 2014ம் ஆண்டு தேர்ந்தெடுத்தது குறிப்பிடத்தக்கது.

    பேட்மேன் பாலிவுட் படம்

    பேட்மேன் பாலிவுட் படம்

    பெண்களுக்காக நாப்கின் புரட்சி செய்து 'பத்மஶ்ரீ' விருது வென்ற அருணாசலம் முருகானந்தம் அவர்களின் வாழ்க்கை தான் பாலிவுட்டில் 'பேட்மேன்' (Padman) படமாகி இருக்கிறது. அருணாச்சலம் முருகானந்தம் வேடத்தில் அக்‌ஷய் குமார் நடித்திருக்கிறார். ராதிகா ஆப்தே, சோனம் கபூர் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இப்படத்தை பால்கி இயக்கியிருக்கிறார்.

    தனுஷ் நடிக்க வேண்டும்

    தனுஷ் நடிக்க வேண்டும்

    பேட் மேன்' படத்திற்கு பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. இந்த திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைத்துள்ளது. இந்த படத்திற்கு தேசிய விருது கிடைத்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள அருணாசலம் முருகானந்தம், "பேட்மேன்" திரைப்படம் தமிழ் மொழியில் படமாக்கப்பட்டால் நடிகர் தனுஷ் நடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    English summary
    Arunachalam Muruganantham, the inventor of the revolutionary low-cost sanitary pad-making machine, wants actor Dhanush to play his role in the Tamil version of his biopic.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X