இந்த வீடியோவை பார்க்க பார்க்க வயித்தெரிச்சலா இருக்கு...
Recommended Video

சென்னை: அக்ஷய் குமாரின் பாட்மேன் படத்தின் டைட்டில் பாடல் வெளியாகி ஹிட்டாகியுள்ளது.
கோவையை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தத்தின் வாழ்க்கையை பாலிவுட்டில் படமாக்கியுள்ளார்கள். அவர் மாதவிடாய் நேரத்தில் பெண்கள் பயன்படுத்த மலிவு விலையில் நாப்கின் தயாரிக்கும் எந்திரத்தை கண்டுபிடித்தவர்.
அதை வைத்து அவர் வியாபாரம் செய்யாமல் சேவை செய்து கொண்டிருக்கிறார்.

பாட்மேன்
அருணாச்சலத்தின் வாழ்க்கை வரலாறு பாட்மேன் என்ற பெயரில் பாலிவுட்டில் படமாகியுள்ளது. மனைவி ட்விங்கிள் தயாரிக்க அக்ஷய் குமார் அருணாச்சலமாக நடித்துள்ளார்.
ஹிட்
பாட்மேன் படம் வரும் ஜனவரி மாதம் 26ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் பாட்மேன் டைட்டில் பாடலை வெளியிட்டுள்ளனர். பாடல் அனைவருக்கும் பிடித்துள்ளது.

சூப்பர் ஹிட்டு
படத்தின் ட்ரெய்லர், டைட்டில் பாடலை பார்த்தவர்கள் பாட்மேன் படம் ஹிட்டு இல்லை இல்லை சூப்பர் டூப்பர் ஹிட்டு என்று சமூக வலைதளங்களில் கூறி வருகிறார்கள்.

தமிழ்
நம்ம தமிழனை நம் தமிழ் சினிமா அல்லவா முதலில் கொண்டாடியிருக்கணும். இந்த பாட்மேன் டைட்டில் பாடலை பார்க்கும்போது இது தமிழில் படமாகவில்லையே என்று பலருக்கு ஆதங்கமாக உள்ளது.


Click it and Unblock the Notifications











