பாரதிராஜா யாரு, பாக்யராஜ் யாரு.. இந்த நடிகைக்கு சுத்தமாக அடையாளமே தெரியலையே!

By Mayura Akilan

நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருப்பவர்களுக்கு அந்த நிகழ்ச்சிக்கு வரும் சிறப்பு விருந்தினர்களைப் பற்றி ஓரளவிற்காவது தெரிந்திருக்க வேண்டும்.

திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சி என்றால் நடிகர், நடிகையர்களைப் பற்றி தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம்.

ஆனால் பல ஆண்டுகாலமாக தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகை பத்மபிரியாவிற்கு இயக்குநர் இமையம் பாரதிராஜாவையும், பாக்யராஜையும் அடையாளம் தெரியாமல் போனதுதான் திரை உலகத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

சேரன் படத்தில்

சேரன் படத்தில்

சேரனின் தவமாய் தவமிருந்து படத்தில் நடித்தவர் நடிகை பத்மபிரியா. இதன் பின்பு ‘பட்டியல்', ‘சத்தம் போடாதே', ‘மிருகம்', ‘பொக்கிஷம்', ‘இரும்புக் குதிரை முரட்டுச் சிங்கம்', ‘தங்கமீன்கள்' ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக ‘பிரம்மன்' படத்தில் ஒரு குத்துப் பாடலுக்கும் நடனமாடியிருக்கிறார்.

நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆன பத்மபிரியா

நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆன பத்மபிரியா

சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற இயக்குநர் சேரனின் சினிமா டூ ஹோம் நிறுவன அறிமுக நிகழ்ச்சியில், நடிகர் மிர்ச்சி செந்திலுடன் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

பாக்யராஜை தெரியாதா?

பாக்யராஜை தெரியாதா?

விருந்தினர்களை மேடைக்கு அழைக்கும்போது இயக்குநர் இமயம் பாரதிராஜாவை பார்த்து "பாக்யராஜ் அவர்களை மேடைக்கு அழைக்கிறேன்.." என்று சொல்ல அரங்கமே ஒரு நிமிடம் திகைத்துப் போனது. இதைக் கேட்டு முன் வரிசை பிரமுகர்கள் வாய்விட்டுச் சிரிக்க.. பாரதிராஜாவும் சிரித்துவிட்டார்.

நான் இங்க இருக்கேன்…

நான் இங்க இருக்கேன்…

இதற்குப் பின்பும் மீண்டும் இரண்டு முறை பாரதிராஜாவை பார்த்து "திரு.பாக்யராஜை மேடைக்கு அழைக்கிறோம்.." என்று சொல்ல இன்னொரு மூலையில் அமர்ந்திருந்த இயக்குநர் கே.பாக்யராஜ் எழுந்து "அம்மா அவர் பாரதிராஜாம்மா.. நான் இங்க உக்காந்திருக்கேன்.." என்று சொல்லியும் பத்மபிரியா திரும்பாமல் பாரதிராஜாவையே பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் சிரிப்போடு மேடையேறினார் பாக்யராஜ்..

ஆள் அடையாளம் தெரியாதா?

ஆள் அடையாளம் தெரியாதா?

கிட்டத்தட்ட 10 வருடங்களாக தமிழ், மலையாளம் பீல்டில் இருக்கும் நடிகை பத்மபிரியாவுக்கு பாக்யராஜ், பாரதிராஜா இருவரின் அடையாளமே தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சொதப்பிய செந்தில்

சொதப்பிய செந்தில்

இதாவது பரவாயில்லை.. தமிழ் நடிகர் மிர்ச்சி செந்தில் தன் பங்குக்கு "இயக்குநர் சிகரம் பாரதிராஜாவை மேடைக்கு அழைக்கிறோம்.." என்றார். சரி.. ஒரு முறைதானே.. திருத்திக் கொள்வார் என்று எதிர்பார்த்தால், பேச அழைத்தபோதும் மீண்டும் "இயக்குநர் சிகரம் பாரதிராஜாவை பேச அழைக்கிறோம்.." என்றார். இமையத்தினை சிகரமாக்கிவிட்டார் செந்தில் என்று சிரித்துக்கொண்டார் பாரதிராஜா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X