நடிகை பத்மப்ரியாவுக்கு திருமணம்... குஜராத் எஞ்ஜினீயர் ஜாஸ்மினை மணந்தார்!
பிரபல தமிழ் - மலையாள நடிகை பத்மப்ரியாவுக்கு இன்று மும்பையில் திருமணம் நடந்தது.
மாப்பிள்ளை பெயல் ஜாஸ்மின். அமெரிக்காவில் செட்டிலான குஜராத் இளைஞர்.

மெகானிக்கல் எஞ்ஜினீயரிங் படித்துள்ள ஜாஸ்மின் அமெரிக்காவில் மாசசூசெட்ஸில் பணியாற்றுகிறார். ஜமால் அப்துல் லதீஃப் வறுமை ஒழிப்பு அமைப்பின் தெற்காசிய பிராந்திய கொள்கை வகுப்புத் தலைவராக உள்ளார் ஜாஸ்மின்.
சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு பொது நிர்வாகவியலில் மேற்படிப்பு படிக்கப் போன பத்மப்ரியா, அங்குதான் ஜாஸ்மினை முதலில் சந்தித்தாராம். நட்பில் ஆரம்பித்து காதலில் முடிந்துள்ளது இந்த உறவு. பெற்றோர் சம்மதத்துடன் மும்பையில் இன்று திருமணம் நடந்தது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இதில் பங்கேற்றனர்.
பத்மப்ரியா தமிழ், மலையாளம், இந்தி மற்றும் பெங்காலி மொழிகளில் மொத்தம் 48 படங்களில் நடித்துள்ளார். நடிப்புக்காக தேசிய விருது பெற்றுள்ளார்.


Click it and Unblock the Notifications











