தீபிகா தலைக்கு ரூ.5 கோடி பரிசு - 'பத்மாவதி'க்கு எதிராக பகிரங்க கொலை மிரட்டல்!

By Vignesh Selvaraj

மும்பை : தீபிகா படுகோனே, ரன்வீர் சிங் ஆகியோர் நடித்திருக்கும் பத்மாவதி படத்தை வெளியிடக்கூடாது என பல அமைப்புகள் படக்குழுவினருக்கு பகிரங்க மிரட்டல் விடுத்து வருகின்றன.

பத்மாவதி படத்துக்கு ஆதரவு தெரிவித்த, நடிகை தீபிகா படுகோனேவின் மூக்கை வெட்டுவோம் என ஒரு அமைப்பு பகிரங்க மிரட்டல் விடுத்திருந்தது.

இந்நிலையில், தீபிகாவின் தலையைக் வெட்டிக் கொண்டு வருபவர்களுக்கு ரூ.5 கோடி பரிசு அளிப்போம் என மற்றொரு அமைப்பும் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது.

பத்மாவதி

பத்மாவதி

பாலிவுட்டின் பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி, ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்த ராணி பத்மினியின் கதையை மையமாக வைத்து 'பத்மாவதி' என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்தப் படம் டிசம்பர் 1-ம் தேதி வெளியாக இருக்கிறது. ராணி பத்மினியாக நடிகை தீபிகா படுகோனேவும், அலாவுதீன் கில்ஜியாக நடிகர் ரன்வீர் சிங்கும், மஹரவால் ரத்தன் சிங்காக ஷாஹித் கபூரும் நடித்திருக்கிறார்கள்.

இழிவுபடுத்தும் காட்சி?

இழிவுபடுத்தும் காட்சி?

'பத்மாவதி' படத்தில் ராஜபுத்திர சமூகத்தினரை இழிவுபடுத்தும் வகையிலான காட்சிகள் இருப்பதாகக் கூறி இந்தப் படத்தை வெளியிடக்கூடாது என அந்த அமைப்பினர் நீதிமன்றத்தில் தடை கோரினர். தடை விதிக்கமுடியாது எனத் தீர்ப்பு வெளியான நிலையில் அந்த சமூகத்தினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தீபிகா ஆதரவு

தீபிகா ஆதரவு

இந்நிலையில், 'பத்மாவதி' படம் வெளியாவதை, யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என தீபிகா படுகோனே தெரிவித்திருந்தார். தீபிகாவின் இந்த அதிரடிப் பேச்சுக்காக ராஜபுத்திர கர்னி சேனா என்ற அமைப்பு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது.

மூக்கை வெட்டுவோம்

மூக்கை வெட்டுவோம்

‛சூர்ப்பனகையின் மூக்கை லட்சுமணன் வெட்டியது போல் நாங்கள் தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்' என ராஜபுத்திர கர்னி சேனா அமைப்பின் ராஜஸ்தான் தலைவர் மிரட்டல் விடுத்துள்ளார். படம் வெளியாகும் நாளன்று நாடு தழுவிய அளவில் பந்த் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தலையை வெட்டினால் 5 கோடி

தலையை வெட்டினால் 5 கோடி

இதேபோன்று உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த சாத்ரிய சமோஜ் எனும் அமைப்பு, 'தீபிகா உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற வேண்டும். இல்லையென்றால், அவரது தலையை வெட்டி எடுத்து வருபவர்களுக்கு ரூ.5 கோடி பரிசளிக்கப்படும். இயக்குநரும் இந்தப் படத்தை வெளியிடும் முயற்சியைக் கைவிட வேண்டும்' என எச்சரிக்கை விடுத்துள்ளது.

பலத்த பாதுகாப்பு

பலத்த பாதுகாப்பு

'பத்மாவதி' விவகாரத்தால் தீபிகாவிற்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக தீபிகா படுகோனேவின் வீடு மற்றும் அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தீபிகாவுக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் பாலிவுட் திரையுலகில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X