200 பேர் சேர்ந்து 600 நாட்களாக உருவாக்கிய தீபிகா படுகோனேவின் நகைகள்! - 'பத்மாவதி' சீக்ரெட்

By Vignesh Selvaraj

மும்பை : சஞ்சய் லீலா பன்சாலி தனது படங்களுக்கு அதிக உழைப்பைக் கொடுத்து நேர்த்தியான தரத்தோடு ரசிகர்களுக்கு வழங்குபவர். படத்திற்கான கதை, கதைக்கான நாயகர்கள் தேர்விலும் எப்போதும் அதிக கவனமாக இருப்பவர் பன்சாலி.

பன்சாலியின் டீம், படத்தில் நடிப்பவர்களின் மேக்கப், படத்திற்கு தேவையான செட் வடிவமைப்பு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துவார்கள். பார்வையாளர்களை அசத்தும் வகையில் பிரமாண்டமான வடிவமைப்புகளை தத்ரூபமாக உருவாக்குவார்கள்.

பாஜிராவ் மஸ்தானி படத்தின் மேக்கிங்குக்காக பல விருதுகளைப் பெற்றபோதும் 'பத்மாவதி' இதைவிடச் சிறப்பாக இருக்கும் எனக் கூறினார் பன்சாலி. இந்நிலையில் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே நடிப்பில் வெளியாகும் 'பத்மாவதி' படத்தின் ட்ரெய்லர் யூ-ட்யூபை தெறிக்கவிட்டது.

தீபிகா படுகோனே

தீபிகா படுகோனே இந்தப் படத்தில் ராஜபுத்திர அரசி ராணி பத்மினியாக நடிக்கிறார். ராணிக்கு உரிய கம்பீரத்தை ரசிகர்களுக்கு உணரவைப்பது சாதாரண விஷயமல்ல. அதை பன்சாலி டீம் சிறப்பாகவே செய்திருப்பார்கள்.

கைவினைக் கலைஞர்கள்

கைவினைக் கலைஞர்கள்

ராணி பத்மினியாக நடிக்கும் தீபிகா படுகோனே அணிந்திருக்கும் நகைகள், லெஹங்காக்கள் ஆகியவை கையால் வடிவமைக்கப்பட்டவை எனப் பலருக்குத் தெரியாது. இந்தத் தகவலை தற்போது வெளியிட்டிருக்கிறார்கள்.

400 கிலோ தங்கம்

400 கிலோ தங்கம்

200 கைவினைக் கலைஞர்கள் சேர்ந்து, 400 கிலோ எடை கொண்ட தங்கத்தால் 600 நாட்களாக உருவாக்கிய நகைகளைத்தான் தீபிகா படுகோனே அணிந்திருக்கிறார்.

ராஜபுத்திர நகைகள்

ராஜபுத்திர காலத்தின் ஆபரணங்களைப் பற்றி நிறைய ஆய்வுகளைச் செய்து ஒவ்வொரு ஆபரணங்களும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த வீடியோ பத்மாவதி அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X