பத்மாவதி பிரச்சனை பத்தி எரியுது மோடி என்ன செய்கிறார்?: ரஜினியின் ஸ்டைல் குரு கேள்வி

By Siva

மும்பை: பத்மாவதி பிரச்சனை குறித்து எதுவுமே பேசாமல் பிரதமர் மோடி, நடிகர் அமிதாப் பச்சன் அமைதியாக இருப்பது ஏன் என்று நடிகரும், பாஜக எம்.பி.யுமான சத்ருகன் சின்ஹா கேள்வி எழுப்பியுள்ளார்.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே நடித்துள்ள பத்மாவதி படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எதிர்ப்பால் பத்மாவதி படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தீபிகா, பன்சாலிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து பாலிவுட் நடிகரும், பாஜக எம்.பி.யுமான சத்ருகன் சின்ஹா பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அமிதாப்

பத்மாவதி சர்ச்சை பெரிதாகியுள்ள நிலையில் அமிதாப் பச்சன், ஆமீர் கான், ஷாருக்கான் ஏன் எதுவுமே சொல்லவில்லை என்று மக்கள் கேட்கிறார்கள். நம் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அல்லது நம் பிரபலமான பிரதமர் மோடி ஏன் அமைதியாக உள்ளார்கள் என்று ட்வீட்டியுள்ளார் சத்ருகன் சின்ஹா.

கருத்து

கருத்து

சஞ்சய் லீலா பன்சாலி பேசிய பிறகே நான் பத்மாவதி பிரச்சனை பற்றி பேசுவேன். இயக்குனரின் நன்மையை மனதில் வைத்தே பேசுவேன். அதுவும் பேசுமாறு கூறினால் தான் பேசுவேன் என்கிறார் சத்ருகன் சின்ஹா.

பிரதமர்

பிரதமர்

சத்ருகன் சின்ஹா மோடியை தாக்கிப் பேசுவது இது முதல் முறை அல்ல. பாஜகவில் இருந்து கொண்டே மோடியை தொடர்ந்து விமர்சிக்கிறார் சத்ருகன் சின்ஹா. பணமதிப்பிழப்பு நடவடிக்கை பெரும் தோல்வி என்று அவர் வெளிப்படையாக தெரிவித்தார்.

இரண்டு பேர் ஆர்மி

இரண்டு பேர் ஆர்மி

பாஜகவில் அமித் ஷாவும், மோடியும் அதிகாரம் படைத்தவர்களாக இருப்பதை சுட்டிக் காட்டி இரண்டு பேர் கொண்ட ஆர்மியை வைத்துக் கொண்டு ஒன் மேன் ஷோ நடத்தினால் சவால்களை சந்திக்க முடியாது என்று சின்ஹா முன்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X