twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'பத்மாவதி' அடுத்த வருடம் தான் ரிலீஸ் ஆகுமா?

    By Vignesh Selvaraj
    |

    மும்பை : பிரபல பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், தீபிகா படுகோனே, ஷாகித் கபூர், ரன்வீர் சிங் ஆகியோர் நடித்துள்ள படம் 'பத்மாவதி'.

    படத்தில் சித்தூர் ராணி பத்மினியை தவறாகச் சித்தரிப்பதாக, ராஜபுத்திர சமூகத்தினரின் கடும் எதிர்ப்பு காரணமாக, டிசம்பர் 1-ம் தேதி ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டிருந்த பத்மாவதி படம் தள்ளிவைக்கப்பட்டது.

    உத்தர பிரதேசம், குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் பத்மாவதி படத்தைத் திரையிட முடியாது என அந்தந்த மாநில முதல்வர்களே அறிவித்துவிட்டனர்.

    பத்மாவதிக்கு ஆதரவு

    பத்மாவதிக்கு ஆதரவு

    மேற்கு வங்காளத்தில் 'பத்மாவதி' படத்தைத் திரையிடத் தேவையான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். பல மாநிலங்களில் எதிர்ப்பு வலுத்த 'பத்மாவதி' படத்திற்கு முதல் ஆதரவுக் குரல் மேற்கு வங்க அரசிடமிருந்து ஒலித்திருக்கிறது.

    ஜனவரியில் ரிலீஸா?

    ஜனவரியில் ரிலீஸா?

    ஆனால், நாடு முழுவதும் எதிர்ப்பால் படத்தை வெளியிடமுடியாத சூழல் நிலவுகிறது. எப்போது ரிலீஸ் செய்ய உள்ளனர் என்ற புதிய தேதியும் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்நிலையில், இந்தப் படத்தை ஜனவரி 26-ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

    பத்மாவதியால் தள்ளிப்போன அமிதாப் பச்சன் படம்

    பத்மாவதியால் தள்ளிப்போன அமிதாப் பச்சன் படம்

    டிசம்பர் 1-ம் தேதியில் தான் அமிதாப் பச்சன், ரிஷி கபூர் நடிப்பில் உருவாகியிருக்கும் '102 நாட் அவுட்' படமும் ரிலீஸாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், '102 நாட் அவுட்' படத்தை டிசம்பர் கடைசிக்கு தள்ளி வைத்தனர். பத்மாவதி உடனான மோதலை தவிர்க்கும் விதமாக இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போய் உள்ளதாகக் கூறப்பட்டது. இப்போது அந்தப் படத்தின் ரிலீஸ் தேதியும் குழப்பத்தில் இருக்கிறது.

     தேர்தல் வரை ரிலீஸ் இல்லை

    தேர்தல் வரை ரிலீஸ் இல்லை

    இது குறித்து 'பத்மாவதி' படக்குழு வட்டாரங்கள் கூறுகையில், இரு மாநில தேர்தல் முடியும் வரை நாங்கள் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்கப் போவதில்லை. ஒருவேளை, படத்தின் ரிலீஸ் பற்றி நீங்கள் உடனடியாகத் தெரிந்துகொள்ள விரும்பினால், ஜனவரிக்கு முன் நாங்கள் அறிவித்து விடுவோம். எனக் கூறியுள்ளனர்.

    சரியான நேரம் அதுதான்

    சரியான நேரம் அதுதான்

    ஜனவரி மாதத்தில் ரிலீசாகும் படங்களில் 'பத்மன்' படம் மட்டுமே பெரிய படம். அதனால் 'பத்மாவதி' படத்தை ரிலீஸ் செய்ய ஜனவரி சரியான நேரமாக இருக்கும். அதற்குள் இந்தப் பிரச்னைகளை முடித்து, சென்சார் போர்டின் சான்றையும் பெற்று விடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என பத்மாவதி படக்குழுவினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Deepika Padukone, Shahid Kapoor and Ranveer Singh are the actors of Padmavati directed by Sanjay Leela Bhansali. 'Padmavati' film was postponed due to the strong opposition of Rajput community. "It is hoped that by January 2018, we will be able to complete the problems and get the certificate of the Censor Board", said Padmavati team.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X