ரன்வீர் சிங், தீபிகா படுகோனே நடிப்பில் 'பத்மாவதி' - ட்ரெய்லர்!
மும்பை : சரித்திரப் படமாக உருவாகி வரும் 'பத்மாவதி' படத்தில் ரன்வீர் சிங், சாஹித் கபூர், தீபிகா படுகோனே ஆகியோர் நடித்திருக்கின்றனர். 'பத்மாவதி' படத்தின் ஒவ்வொரு கேரக்டரின் ஃபர்ஸ்ட் லுக்கும் தனித்தனியாக வெளியிடப்பட்டு வந்தன.
'பத்மாவதி' படத்தை சஞ்சய் லீலா பன்சாலி இயக்க, வியாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் வருகிற டிசம்பர் 1-ம் தேதி வெளியாக இருக்கிறது.

தீபிகா படுகோனே, ஷாகித் கபூர், ரன்வீர் சிங் ஆகியோரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தனித்தனியாக வெளியிடப்பட்டது. தற்போது இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
ரன்வீர் சிங், சுல்தான் அலாவுதின் கில்ஜி வேடத்தில் 'பத்மாவதி' படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் ரன்வீர், நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தப் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டது. பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் பாகுபலியைப் போல போர்க் காட்சிகள், அரண்மனை அரங்குகள் அமைக்கப்பட்டுப் படமாக்கப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications











