பெல்பாட்டம் பேண்ட், துப்பாக்கியுடன் மிரட்டும் சசிகுமாரின் "பகைவனுக்கு அருள்வாய்" டீசர்!
சென்னை : சசிகுமார் கத்துக்குட்டி பட இயக்குனருடன் இணைந்து நடித்து வந்த உடன் பிறப்பே படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது அதில் ஜோதிகா மற்றும் சமுத்திரக்கனி இணைந்து நடித்துள்ளனர்.
கொம்பு வச்ச சிங்கம்டா,எம்ஜிஆர் மகன்,ராஜவம்சம் என சசிகுமாருக்கு அடுத்தடுத்த திரைப்படங்கள் வெளியாக காத்துக் கொண்டிருக்க இப்பொழுது இயக்குனர் அனீஸ் இயக்கத்தில் பகைவனுக்கு அருள்வாய் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
பக்கா கேங்ஸ்டர் படமாக உருவாகி வரும் பகைவனுக்கு அருள்வாய் படத்தின் டீசர் நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகி இணையதளத்தை மிரட்டி வருகிறது.

முழு ஈடுபாட்டுடன்
தொடர்ந்து நல்ல நல்ல கதைகளில் நடித்து சிறந்த நடிகராகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கும் சசிகுமார் சுப்ரமணியபுரம் மற்றும் ஈசன் உள்ளிட்ட தரமான படங்களை இயக்கியும் உள்ளார். இப்பொழுது முழு ஈடுபாட்டுடன் படங்களில் ஹீரோவாக நடித்து வரும் இவருக்கு அடுத்து அடுத்து படங்கள் ரிலீசாக காத்துகொண்டு உள்ளது.

ஹாட்ரிக் வெற்றி
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன்,சீமராஜா என சிவகார்த்திகேயனுக்கு ஹாட்ரிக் வெற்றியை கொடுத்த இயக்குனர் பொன்ராம் இப்பொழுது சசிகுமாருடன் இணைந்துள்ள எம்ஜிஆர் மகன் திரைப்படம் மிக விரைவிலேயே திரையங்குகளில் வெளியாக உள்ளது. எம் ஜி ஆர் மகன் படத்தை தொடர்ந்து சசிகுமாருக்கு ராஜவம்சம் மற்றும் கொம்பு வச்ச சிங்கம்டா உள்ளிட்ட படங்களும் அனைத்து பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.

பகைவனுக்கு அருள்வாய்
பெரும்பாலும் வில்லேஜ் சப்ஜெக்ட் படங்களில் நடித்து வரும் சசிகுமார் இப்பொழுது கேங்க்ஸ்டர் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இயக்குனர் அனீஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு பகைவனுக்கு அருள்வாய் என மாஸான டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதில் சசிகுமாருக்கு ஜோடியாக வாணிபோஜன் மற்றும் பிந்து மாதவி என இரு கதாநாயகிகள் நடித்து வருகின்றனர். நாசர், சதீஷ், ஜெயபிரகாஷ் போன்ற பலர் முக்கிய வேடங்களில் இப்படத்தில் நடித்து வருகின்றனர் .

டீசர் வெளியானது
4 மங்கீஸ் ஸ்டுடியோ தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம் ஏற்கனவே யோகி பாபுவின் கூர்கா படத்தை தயாரித்து ஹிட் கொடுத்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பகைவனுக்கு அருள்வாய் படத்தின் டீசர் வெளியானது .

கையில் துப்பாக்கியுடன் பெல்பாட்டம் பேண்ட்
அதில் சசிகுமார் இருவேறு கெட்டப்புகளில் தோன்றுகிறார். அதில் ஒரு கெட்டப்பில் கேங்க்ஸ்டர் டானாக கையில் துப்பாக்கியுடன் பெல்பாட்டம் பேண்ட் போட்டுக்கொண்டு 80 களின் ஸ்டைலில் தோன்ற மற்றொரு கெட்டப்பில் இப்பொழுது உள்ள சாதாரண லுக்கில் தோன்றுகிறார். ஜெயிலில் கைதி, கேங்ஸ்டார் என விறுவிறுப்பாக மாஸான வசனங்களுடன் வெளியான பகைவனுக்கு அருள்வாய் டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











