என்கிட்டேயே வா, நான் வாயை திறந்தால் அவ்ளோ தான்: நடிகைக்கு தயாரிப்பாளர் எச்சரிக்கை
மும்பை: நான் வாயை திறந்தால் கங்கனா பற்றி நிறைய விஷயம் வெளியே வரும் என்று தயாரிப்பாளர் பஹலஜ் நிஹலானி தெரிவித்துள்ளார்.
ஐ லவ் யூ பாஸ் படத்தின் போட்டோஷூட்டில் உள்ளாடை அணியாமல் வெறும் சாட்டின் ரோபை சுற்றிக் கொண்டு வர வைத்தார் தயாரிப்பாளர் பஹலஜ் நிஹலானி என்று பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.
இந்நிலையில் இது குறித்து பஹலஜ் நிஹலானி பேட்டி அளித்துள்ளார். அவர் கங்கனா பற்றி கூறியிருப்பதாவது,

கங்கனா
கங்கனா என்னிடம் விளையாட்டு காட்டக் கூடாது. ஐ லவ் யூ பாஸ் கங்கனா கூறியது போன்று சாப்ட் போர்ன் படம் இல்லை. நான் அந்த புகைப்பட விளம்பரம், மூன்று பாடல்களை ஷூட் செய்ய ரூ. 1.5 கோடி செலவு செய்தேன்.

போஸ்டர்
என் விளம்பரம், என் பட போஸ்டரை வைத்து தான் கங்கனாவுக்கு மகேஷ் பட்டின் கேங்ஸ்டர் பட வாய்ப்பு கிடைத்தது. அந்த பட வாய்ப்பு கிடைத்தவுடன் என் படத்தில் இருந்து வெளியேறினார்.

விளையாட்டு
கங்கனாவுடன் 3 பட டீலில் கையெழுத்து வாங்கியிருந்தோம். அப்படி இருக்கும்போது அவர் கேங்ஸ்டர் படத்தில் நடிக்க போகிறேன் என்று கேட்டதால் நானும் சரி என்று விட்டேன். அவர் என்னிடம் விளையாட்டுக் காட்டினால், நான் பதிலுக்கு நிறைய விளையாட்டு காட்ட வேண்டி இருக்கும்.

பஹலஜ் நிஹலானி
ஐ லவ் யூ பாஸ் இளைஞர்களுக்கான படம். அந்த படத்தில் கங்கனா திருமணமான பெண் கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது. அவரின் கணவராக நடிக்க அமிதாப் பச்சனிடம் கேட்டோம். சீனி கம் போன்ற படம் அது. அமிதாப் ஜி பிசியாக இருந்ததால் அவரால் அந்த படத்தில் நடிக்க முடியவில்லை. அது ஆபாச படம் இல்லை. அது போன்ற படங்களை எடுக்கும் எண்ணம் எனக்கு இல்லை என்கிறார் பஹலஜ் நிஹலானி.


Click it and Unblock the Notifications











