Paiyaa 2: கார்த்தி கேரக்டரில் இளம் ஹீரோ... பையா 2ம் பாகத்தில் லிங்குசாமி எடுத்த அதிரடி முடிவு
சென்னை: கார்த்தி - லிங்குசாமி கூட்டணியில் வெளியான பையா திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில் கார்த்திக்குப் பதிலாக இளம் ஹீரோவை களமிறக்க முடிவு செய்துள்ளாராம் இயக்குநர் லிங்குசாமி.

பையா 2ம் பாகத்தில் லிங்குசாமி அதிரடி
அமீரின் பருத்திவீரனில் ஹீரோவாக அறிமுகமான கார்த்தி, தனது மூன்றாவது படத்தில் இயக்குநர் லிங்குசாமியுடன் இணைந்தார். அதன்படி கார்த்தி - லிங்குசாமி கூட்டணியில் உருவான பையா திரைப்படம் 2010ம் ஆண்டு வெளியானது. கார்த்தியுடன் தமன்னா, ஜெகன், மிலிந்த் சோமன் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
பருத்திவீரன் படத்தில் கிராமத்து கெட்டப்பில் நடித்திருந்த கார்த்திக்கு, பையா சாக்லேட் ஹீரோ லுக் கொடுத்தது. அதேபோல் கார்த்தி - தமன்னா கெமிஸ்ட்ரியும் செம்மையாக ஒர்க் அவுட் ஆனது. இன்னொரு பக்கம் யுவன் இசையில் பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்தன. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற பையா, பருத்திவீரன், ஆயிரத்தில் ஒருவன் வரிசையில் கார்த்தியின் கேரியரில் முக்கியமான படமாக அமைந்தது.
இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என லிங்குசாமி கூறியிருந்தார். இதனிடையே லிங்குசாமி இயக்கிய வேட்டை, அஞ்சான், சண்டக்கோழி 2, தி வாரியர் படங்கள் எதிர்பார்த்த அளவில் வெற்றிப் பெறவில்லை. இதனால் பையா 2ம் பாகமும் தள்ளிக் கொண்டே இருந்தது. அதேநேரம் பையா இரண்டாம் பாகத்திலும் கார்த்தி, தமன்னா ஜோடி இணையும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால், தற்போது கார்த்திக்கு பதிலாக இளம் ஹீரோவை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளாராம் லிங்குசாமி. அதன்படி பையா 2ம் பாகத்தில் ஆகாஷ் முரளி ஹீரோவாக நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இவர் மறைந்த நடிகர் முரளியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகாஷின் அண்ணன் அதர்வாவும் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்நிலையில் பையா 2வில் அதர்வாவின் தம்பியும் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார்.
கார்த்தியை விட்டுவிட்டு இளம் ஹீரோவுடன் இணைந்துள்ள லிங்குசாமி, பையா 2 மூலம் கம்பேக் கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்தப் படத்தில் ஆகாஷ் முரளிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளது யார் என்பது குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை. முன்னதாக பையா 2-வில் ஆர்யா ஹீரோவாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











