»   »  ஒரு வேளை சோறு, சாலையோரம் தூக்கம், வீடுகளுக்கு பெயிண்ட் அடிக்கும் பிரபல நடிகர்

ஒரு வேளை சோறு, சாலையோரம் தூக்கம், வீடுகளுக்கு பெயிண்ட் அடிக்கும் பிரபல நடிகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காததால் பிரபல பாகிஸ்தான் நடிகர் ஷாஹித் நசீப் வயிற்றுப் பிழைப்புக்காக வீடுகளுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை பார்த்து வருகிறார்.

பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்தவர் ஷாஹித் நசீப். பாகிஸ்தானில் மிகவும் பிரலமான நடிகர். அவர் துல்லாரி, ஜப் உஸி முஜ்சே மொஹப்பத் ஹுயி, இல்தாஜா உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.


Pak actor resorts painting to survive after film career goes nowhere

தற்போது அவர் நடிக்க வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்படுகிறார். இது குறித்து அவர் கூறயிருப்பதாவது,


நடிக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஒரு நாளைக்கு ஒரு வேளை தான் சாப்பிடுகிறேன். லாகூரில் தங்க வீடு இல்லை. அதனால் சாலையோரம் படுத்து தூங்குகிறேன்.


வீடு வாடைக்கு எடுக்கும் அளவுக்கு வசதி இல்லை. வயிற்றுப் பிழைப்புக்காக யார், யார் வீடுகளுக்கோ பெயிண்ட் அடித்துக் கொண்டிருக்கிறேன். சொந்தமாக பாடல் வீடியோவை ரிலீஸ் செய்ய பணம் சேமித்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.

English summary
A Pakistani actor, Shahid Naseeb,who has numerous television serials to his credit has been forced to become a house painter to make ends meet.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil