Sana Javed: யாரு இந்த சனா ஜாவித்?.. சானியா மிர்சா கணவருடன் திருமணம்.. இவருக்கும் செகண்ட் மேரேஜாம்!

கராச்சி: இந்தியாவையே எதிர்த்துக் கொண்டு இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்துக் கொண்டு பாகிஸ்தான் நாட்டின் மருமகள் ஆனார். சானியா மிர்சாவையே இரண்டாம் தாரமாக திருமணம் செய்துக் கொண்ட கிரிக்கெட் வீரர் தற்போது மூன்றாவதாக பாகிஸ்தான் நடிகை சனா ஜாவிதை திருமணம் செய்துக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாலிவுட் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் விதமாக சானியா மிர்சா கவர்ச்சியில் கலக்கினார். அவர் ஆட்டத்தை ஏகப்பட்ட இளைஞர்கள் கண்டு ரசித்தனர். பாலிவுட் நடிகர்களுக்கே சானியா மிர்சா மீது கிரஷ் ஏற்பட்ட நிலையில், அவருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மீது காதல் ஏற்பட்டது. ஆனால், சோயிப் மாலிக்கிற்கோ தற்போது பாகிஸ்தான் நடிகை சனா ஜாவிது மீது காதல் ஏற்பட திருமணம் செய்துக் கொண்டார். அவருக்கும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனது தான் ஹைலைட்டே என்கின்றனர்.

Pakistan Actress Sana Javed done her second marriage with Saniya Mirza Husband Shoaib Malik

சானியா மிர்சாவுடன் விவாகரத்து: கடந்த 2010ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் சானியா மிர்சா. சுமார் 13 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்து வந்த இருவருக்கும் 2018ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. 8 வருடம் குழந்தை பெற்றுக் கொள்ளாமல் ஜாலியாக திருமண வாழ்க்கையை என்ஜாய் பண்ணி வந்த இருவரும் குழந்தை பெற்ற சில ஆண்டுகளிலேயே விவாகரத்து செய்து சமீபத்தில் பிரிந்தனர். விவாகரத்து குறித்து ரொம்பவே மனமுடைந்து சானியா மிர்சா கருத்து தெரிவித்து இருந்தார்.

Pakistan Actress Sana Javed done her second marriage with Saniya Mirza Husband Shoaib Malik

பாகிஸ்தான் நடிகையுடன் திருமணம்: கல்யாண வாழ்க்கை கசந்து விட்டதாக மறைமுகமாக சானியா மிர்சா பதிவு போட்ட போதே அவர் விவாகரத்து செய்து பிரிந்து விட்டார் என்றும் சானியா மிர்சா மீது தான் தவறு உள்ளது என ஏகப்பட்ட பேச்சுக்கள் கிளம்பின. ஆனால், 2 நாட்களிலேயே சோயிப் மாலிக் பாகிஸ்தான் நடிகை சனா ஜாவிதை திருமணம் செய்துக் கொண்டது சானியா மிர்சா ரசிகர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Pakistan Actress Sana Javed done her second marriage with Saniya Mirza Husband Shoaib Malik

2வது திருமணம்: 36 வயது சானியா மிர்சாவை கழட்டிவிட்டு 30 வயது இளம் பாகிஸ்தான் நடிகையை திருமணம் செய்துக் கொண்டார் சோயிப் மாலிக். 2020ம் ஆண்டு தான் உமைர் ஜெயிஸ்வால் என்பவரை அந்த பாகிஸ்தான் நடிகை திருமணம் செய்தார். ஆனால், கடந்த ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்த நிலையில், தற்போது சோயிப் மாலிக்கை 2வதாக திருமணம் செய்துக் கொண்டார். டிவி சீரியல்களில் பிரபலமான இவர் 2013ல் வெளியான பெஹாத் படத்தில் நடித்து அறிமுகமானார். ஷாரிக் இ ஹயாத், தினோ கி துல்ஹானியா, ஐ லவ் யூ ஸாரா உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X