Rajinikanth: பாகிஸ்தான் வீரரையும் கவர்ந்த பாட்ஷா.. அந்த கண்ணாடி போடுற ஸ்டைலை அப்படியே பண்றாரே!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு உலக அளவில் ரசிகர்கள் உள்ள நிலையில் பாகிஸ்தானில் மட்டும் இல்லாமல் இருப்பார்களா என்ன? பாகிஸ்தான் கிரிக்கெட் அணியிலேயே நடிகர் ரஜினிகாந்துக்கு தீவிர ரசிகர் ஒருவர் உள்ளார். அவரது வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் தீயாக பரவி வருகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குன நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் வெளியான ஜெயிலர் திரைப்படம் இந்தியாவில் மட்டுமின்றி ஓவர்சீஸிலும் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியது. அதிகபட்சமாக ஜெயிலர் திரைப்படம் 600 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருக்கலாம் எனக் கூறுகின்றனர்.

Pakistan cricketer Azam Khan Thalaivar Rajinikanth video trending in social media

ஜகமெல்லாம் ஜெயிலர்: தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக 525 கோடி ரூபாயை ஜெயிலர் திரைப்படம் வசூல் செய்ததாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோருக்கு சொகுசு கார் மற்றும் காசோலையை தயாரிப்பாளர் கலாநிதி மாறன் வழங்கினார்.

மேலும், சமீபத்தில் நடந்த பிரம்மாண்டமான ஜெயிலர் திரைப்படத்தின் விழா நிகழ்ச்சியில் படத்தில் பணியாற்றிய 300 பேருக்கு தங்கக் காசுகள் வழங்கப்பட்டன.

Pakistan cricketer Azam Khan Thalaivar Rajinikanth video trending in social media

72 வயது எந்திரன்: ஜெயிலர் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் ஜெய்பீம் இயக்குனர் தசெ ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் நடிக்க உள்ளார். அந்தப் படத்தை முடித்துவிட்டு மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் நடிக்க உள்ளார்.

மேலும் தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி உள்ள லால் சலாம் படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 72 வயதிலும் எந்திரன் ரஜினி போல அசராது உழைத்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் உள்ள அசாம் கான் தீவிர ரசிகராக உள்ளது பெரிய ஆச்சரியம் இல்லை.

பாகிஸ்தான் வீரருக்கே பாட்ஷா: சமீபத்தில், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அசாம் கானிடம் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்கிற கேள்விக்கு "தலைவர் ரஜினிகாந்த்" என பதில் சொல்லியவாறே சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் கண்ணாடி மாட்டுவது போல ஆக்ஷன் செய்த வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

கிரிக்கெட் உலகின் கடவுள் என கொண்டாடப்படும் சச்சின் டெண்டுல்கர் சூப்பர் ஸ்டார் ரசிகர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்க்கும் பாட்ஷா நம்ம ரஜினிகாந்த் என்பதை அறிந்த ரசிகர்கள் அந்த வீடியோவை அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X