முஸ்லீம் பெண், இந்துப்பையன் காதல்... பாகிஸ்தானில் ‘ரான்ஞ்னா’வுக்கு தடை
இஸ்லாமாபாத்: தனுஷ் மற்றும் சோனம் கபூர் நடித்து இந்தியாவில் வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருக்கும் படமான ரான்ஞ்னாவிற்கு பாகிஸ்தான் சென்சார் போர்டு தடை விதித்துள்ளது. மேலும், முரண்பாடான கதையம்சத்தைக் கொண்ட படம் எனவும் முத்திரைக் குத்தியுள்ளது பாகிஸ்தான்.
ரிலீசாவதற்கு இன்னும் சில தினங்களே இருக்கையில் பாகிஸ்தான் சென்சார் போர்டு இத்தகைய தடையை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதனை பாகிஸ்தானில் திரையிடுவதற்கான உரிமையைப் பெற்றுள்ள அம்ஜத் ரஷீத் உறுதி படுத்தியுள்ளார்.

வழக்கமான ஒன்று தான்...
இதற்கு முன்னரும் இதே போன்று, ஏக் தா டைகர், ஜி ஜோ, ஏஜெண்ட் வினோத் முதலிய வெற்றிப் படங்களுக்கு பாகிஸ்தான் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. அப்போதும், இதே போன்று பாகிஸ்தானுக்கு எதிரான கருத்துக்களை அப்படம் வலியுறுத்துவதாக காரணம் கூறியது பாகிஸ்தான் சென்சார் போர்டு.

வெளியிட தடை...
இது குறித்து ஐஎஞிசி குளோபல் எண்டர்டெயிட்மெண்ட் தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகியும், ரான்ஞ்னாவின் பாகிஸ்தானில் வெளியிடும் உரிமையைப் பெற்றவருமான அம்ஜத் ரஷீத் கூறியதாவது, ‘பாகிஸ்தான் தணிக்கை குழுவிடம் இருந்து பெறப்பட்ட கடிதத்தில் படத்தை பாகிஸ்தானில் வெளியிட தடை செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

முரணான காதல்...
அதற்கான காரணமாக, சோனம் கபூர் ஏற்று நடித்துள்ள முஸ்லீம் பெண் கதாபாத்திரம், ஒரு இந்துவை காதலிப்பதாக அமைந்திருப்பதாக காரணம் கூறப்பட்டுள்ளது' என தெரிவித்துள்ளார். (இந்து கதாபாத்திரத்தை தனுஷ் ஏற்று நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது )

ஜூனில் திரையிட பிளான்...
ஜூன் கடைசி வாரத்தில் ரான்ஞ்னா பாகிஸ்தானில் திரையிடப் படுவதாக இருந்தது. பாகிஸ்தான் படப்பிரதியின் டைட்டில் பாடலை ஏ.ஆர். ரஹ்மான் இசையில், பாகிஸ்தான் பாடகர் சிரஜ் உப்பல் பாடியிருந்தார்.

வசூலில் பட்டையைக் கிளப்புகிறது...
கடந்த 21ம் தேதி இந்தியாவில் ரிலீசான ரான்ஞ்சனா இதுவரை 45 கோடி வசூலை வாரிக் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications