பாகிஸ்தானில் சக்கை போடு போடும் விஷால் தம்பி படம்
பெங்களூர்: யஷ் நடித்த கே.ஜி.எஃப். இந்தி டப்பிங் பாகிஸ்தானில் வெளியாகி அமோக ஆதரவை பெற்றுள்ளது.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடித்த கே.ஜி.எஃப். படம் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. படம் ரூ. 200 கோடிக்கு மேல் வசூல் செய்துவிட்டு தொடர்ந்து வசூல் வேட்டை நடத்திக் கொண்டிருக்கிறது.

இந்தியில் சிம்பா படம் வெளியாகியும் கே.ஜி.எஃப். படத்தின் வசூல் பாதிக்கப்படவில்லை. ரூ. 200 கோடி வசூலித்த முதல் கன்னட படம் என்ற சாதனை படைத்த கே.ஜி.எஃப். மேலும் ஒரு சாதனை படைத்துள்ளது.
கே.ஜி.எஃப். இந்தி படம் பாகிஸ்தானில் கடந்த 10ம் தேதி ரிலீஸானது. பாகிஸ்தானில் ரிலீஸான முதல் கன்னட படம் இது தான். யஷ் படத்தை பாகிஸ்தான் மக்கள் கொண்டாடுகிறார்கள்.
அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட கே.ஜி.எஃப். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியுள்ளது. அந்த படத்தின் இரண்டாம் பாகமும் வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கே.ஜி.எஃப். படத்தை தமிழில் வெளியிட்டவர் விஷால். யஷை தனது தம்பி என்று பெருமையுடன் கூறி வருகிறார் அவர்.


Click it and Unblock the Notifications











