51 வயதில் மனதில் பூத்த காதல்.. அம்மாவிற்கு திருமணம் செய்து வைத்த மகள்.. ஹனிமூன் சென்ற சீரியல் நடிகை!
சென்னை: இன்றைய காலகட்டத்தில் இரண்டாவது திருமணம் செய்து கொள்வது எல்லாம் சர்வ சாதாரணமாக மாறிவிட்டது. முன்பெல்லாம் நடிகைகள் தான் இரண்டாவது திருமணம், மூன்றாவது திருமணம் என போட்டி போட்டு கொண்டு திருமணங்களை செய்து வந்தார்கள். ஆனால், இப்போது சாதாரண மக்களும் பிடிக்கவில்லை என்றால் ஈஸியாக விவகாரத்தில் செய்துவிட்டு அடுத்த சில ஆண்டுகளிலேயே வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு புதிய வாழ்க்கையை தொடங்க ஆரம்பித்து விடுகிறார்கள் அதுபோல தான் 51 வயதுடைய நடிகை ஒருவருக்கு தற்போது தன்னுடைய மகளே இரண்டாவது திருமணம் செய்து வைத்து அழகு பார்த்து.
காதல் என்று வந்துவிட்டால் அதற்கு வயதெல்லாம் ஒரு தடையே இல்லை என்பதை இந்த காதல் நிரூபித்து இருக்கிறது. அதாவது பாகிஸ்தானை சேர்ந்த பிரபல தொலைக்காட்சியில் சீரியல் நடிகையாக இருப்பவர் ஜவேரியா அப்பாசி. இவர் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் நடிகையாவதற்கு வருவதற்கு முன்பே 1993 ஆம் ஆண்டு தனது உறவினரான ஷாமூன் அப்பாசி என்பவரை திருமணம் செய்து கொண்டு, 14 வருடம் வாழ்ந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகள் இருந்த நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவருடன். விவகாரத்துக்கு செய்து பிரிந்தனர். அதன் பின் ஜவேரியா சீரியல்களில் நடித்து தனது மகளை வளர்த்து வருகிறார்.

பாகிஸ்தான் நடிகை: தனது மகளுடன் தனிமையாக வாழ்ந்து வந்த நடிகை ஜவேரியா அப்பாசி, நிகழ்ச்சி ஒன்றின் போது தொழிலதிபரான ஆதில் ஹைதர் என்பவரிடம் பழகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவரின் அன்பும், அரவணைப்பும் ஜவேரியாவின் மனதில் காதலை ஏற்படுத்தி உள்ளது. நட்பாக பழகிய இவர்கள் மனதில் காதல் மலர, ஆதில் ஹைதர் தனது காதலை ஜவேரியாவிடம் வெளிப்படுத்தி உள்ளார். ஆனால், திருமண வயதில் மகள் இருக்கும் போது திருமணம் செய்தால், ஊரே சிரிக்கும் என ஐவேரியா தனது காதலை மறைத்துள்ளார். அதன் பின் தனது மகளுக்கு நல்ல ஒரு வரனை பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளார் ஜவேரியா.
தொழிலதிபர் ஆதில் ஹைதர் மூலமாக அம்மாவின் மனதில் இருக்கும் ஆசையை தெரிந்து கொண்ட நடிகை ஜவேரியாவின் மகள், தனது கணவர், மாமியார், மாமனாரின் முன்னிலையில் தனது அம்மாவிற்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்து அழகு பார்த்துள்ளார். தற்போது, இவர்கள் லண்டனில் வசித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











