பாகிஸ்தானில் நடிகையை சுட்டுக் கொன்ற கணவர்

By Siva

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நடிகையும், பாடகியுமான ரேஷ்மாவை அவரது கணவர் சுட்டுக் கொலை செய்துள்ளார்.

பாகிஸ்தானின் கைபர் பக்துங்குவா மாகாணத்தை சேர்ந்தவர் ரேஷ்மா. பாடகியான அவர் நாடகங்களிலும் நடித்துள்ளார். ரேஷ்மா தனது சகோதரருடன் ஹகிமாபாத்தில் வசித்து வந்தார்.

Pakistani actress shot dead by husband

இந்நிலையில் நேற்று அவரது கணவர் வந்து ரேஷ்மாவுடன் சண்டை போட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே அவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் ரேஷ்மாவை சுட்டுவிட்டு தப்பியோடிவிட்டார்.

இந்த சம்பவத்தில் ரேஷ்மா உயிர் இழந்தார். ரேஷ்மா அந்த நபரின் 4வது மனைவி ஆவார். கணவருடன் பிரச்சனை ஏற்பட்டதையடுத்து அவர் தனது சகோதரர் வீட்டில் வசிந்து வந்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த ஆண்டில் மட்டும் கைபர் பக்துங்குவா மாகாணத்தில் 15 பெண் கலைஞர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக மேடை நாடகத்தில் நடித்து வந்த சன்புல் கடந்த பிப்ரவரி மாதம் 3ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X