தடை நீக்கம்: நாளை முதல் பாகிஸ்தானில் இந்திய படங்கள் மீண்டும் திரையிடப்படுகிறது

By Siva

கராச்சி: யூரி தாக்குதலை அடுத்து பாகிஸ்தானில் இந்திய படங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. நாளை முதல் பாகிஸ்தானில் இந்திய படங்கள் திரையிடப்பட உள்ளன.

யூரி தாக்குதலை அடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதட்டமான சூழல் நிலவியது. யூரி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து தீவிரவாத முகாம்களை அழித்து தீவிரவாதிகளை கொன்றது.

Pakistani cinema hall owners likely to resume screening Indian films from tomorrow

இந்நிலையில் இந்தியாவில் பாகிஸ்தான் கலைஞர்கள் பணியாற்ற தடை விதிப்பதாக இந்தியன் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்தது. இதையடுத்து பாகிஸ்தானில் இந்திய படங்களை திரையிட தடை விதிக்கப்பட்டது.

இந்த சூழலில் இந்திய படங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை பாகிஸ்தான் நீக்கியுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன. நாளை முதல் பாகிஸ்தானில் மீண்டும் இந்திய படங்கள் திரையிடப்பட உள்ளன.

இதற்கிடையே தனியார் ஊடக குழுமம் ஒன்று ஆமீர் கானின் தங்கல் படத்தை பாகிஸ்தானில் வெளியிட திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது அரசு விதித்த தடை அல்ல. மாறாக பாகிஸ்தான் திரைப்பட அதிபர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் தாங்களாக முன்வந்து விதித்துக் கொண்ட தடையாகும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X