பாகிஸ்தானில் தளபதிக்கு ரசிகை.. தரமான வீடியோவா இருக்கேப்பா.. விஜய் குறித்து சொன்ன ஒற்றை வார்த்தை இருக்கே
சென்னை: நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவர். அவரது அடுத்த மற்றும் கடைசி படமான ஜன நாயகன் வரும் ஜனவரி மாதம் 9ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. படத்தை ரிலீஸ் செய்யும் வேலைகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. வரும் 27ஆம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ளது. இப்படி இருக்கும்போது பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் தான் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர் என்று தனது தமிழ்நாட்டு தோழியிடம் தெரிவித்துள்ளது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
நடிகர் விஜய் உலகப் புகழ்பெற்ற நடிகர், சில ஆண்டுகளுக்கு முன்னர் சமூக வலைதளங்கள் மூலம் உலகம் முழுவதும் கவனம் ஈர்த்த நடிகர் என்ற பெருமையைப் பெற்றார் விஜய். அவருக்கு இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் தீவிரமான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். இது மட்டும் இல்லாமல், சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் அவருக்கு தீவிரமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இப்படி இருக்கும்போது தற்போது சமூக வலைதளங்களில் விஜய்க்கு பாகிஸ்தானில் உள்ள ரசிகை ஒருவரின் வீடியோ வேகமாக பரவி வருகிறது. மேலும் அவர் அந்த வீடியோவில் தனக்கு தளபதி மிகவும் பிடிக்கும் என்றும், தளபதியின் பீஸ்ட், மாஸ்டர், லியோ உள்ளிட்ட படங்கள் பிடிக்கும் என்றும், அதன் பின்னணி இசையும் மிகவும் பிடிக்கும் என்றும் தெரிவித்தார். தளபதியின் நடிப்பில் அவருக்கு மிகவும் பிடித்த படம் என்றால் அது தி கோட் படம் தான் என்றும் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் ரசிகை: இந்த வீடியோவில் முதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் பேசுகிறார். அதில் அவர் கூறும்போது நான் அவருடன் பேசிக்கொண்டு இருக்கும் போது தளபதி குறித்து அவர் தான் முதலில் பேசினார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதனால் தான் அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இதைப் பார்த்த விஜய் ரசிகர்கள் தற்போது இணையத்தில் அந்த வீடியோவை வேகமாக பகிர்ந்து வருகிறார்கள்.
ரசிகர்கள் கேள்வி: ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 27ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்றும், டிரைலர் புத்தாண்டு கொண்டாட்டமாக படக்குழு வெளியிடுமா என்றும் ரசிகர்கள் இணையத்தில் கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











