Singer Rahat: துபாயில் கைது செய்யப்பட்டாரா பிரபல பாகிஸ்தான் பாடகர்?.. வெளியான தகவல்!

சென்னை: பாகிஸ்தானை சேர்ந்த பிரபல பின்னணி பாடகர் ரஹத் பதே அலி கான் துபாயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர் பாலிவுட்டில் பல முன்னணி நடிகர்களுக்கு பின்னணி பாடி பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். இந்நிலையில் அவரது முன்னாள் மேனேஜர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பஹத் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தொடர்ந்து சர்ச்சைகளிலும் கைதுகளிலும் சிக்கி வருகிறார் ரஹத். முன்னதாக சில ஆண்டுகளுக்கு முன்பு கணக்கில் இல்லா வெளிநாட்டு கரன்சிகளை வைத்திருந்ததாக கூறி, டெல்லி விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். அப்போது ரஹத்துடன் வந்த மற்றொருவரும் கைது செய்யப்பட்டிருந்தார்.

Dubai

பாகிஸ்தான் பின்னணி பாடகர்: பாகிஸ்தானை சேர்ந்த பிரபல பின்னணி பாடகர் ரஹத் பதே அலி கான் பல இந்தி திரைப்படங்களில் பிரபல நடிகர்களுக்கு பாடல்களை பாடியுள்ளார். இவரது பாடல்கள் பல ஏராளமான ரசிகர்களின் விருப்பத்திற்கு உள்ளாகியுள்ளன. இந்நிலையில் ரஹத் பதே துபாயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஹத்தின் முன்னாள் மேனேஜர் சல்மான் அஹமத் கொடுத்த அவதூறு வழக்கின் அடிப்படையில் தற்போது ரஹத் துபாய் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அவதூறு வழக்கில் கைது: இதுகுறித்து சல்மான் அஹமத் துபாய் போலீஸ் அதிகாரிகளிடம் முன்னதாக புகார் அளித்த நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் ரஹத் பதே தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக தன்னை முன்பகை காரணமாக வேலையில் இருந்து நீக்கியதாக அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார். அந்த நேரத்தில் இருவரும் ஒருவர் மீது மற்றொருவர் புகார் அளித்திருந்தனர். தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் அடுத்தடுத்து ரஹத் பதே அலி கான் சிக்கி வருகிறார்.

Dubai

ரஹத் பதே விளக்கம்: கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக இவர் டெல்லி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். அவரிடம் கணக்கில் வராத வெளிநாட்டு கரன்சிகள் இருந்ததாக அப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது. உடன் வந்த மற்றொருவரும் ரஹத்துட,ன் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் துபாயில் மீண்டும் ரஹத் பதே கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தகவல்களை அவர் மறுத்துள்ளார். இதுகுறித்து தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ மூலம் விளக்கம் அளித்துள்ளார்.

அடிப்படை ஆதாரம் அற்றவை: இந்த தகவல்கள் பொய்யானவை மற்றும் அடிப்படை ஆதாரம் அற்றவை என்று தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பேசியுள்ளார் ரஹத் பதே. தான் எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லாமல் இருப்பதாக கூறியுள்ள ரஹத், தான் மீண்டும் நாடு திரும்பி பல ஹிட் பாடல்களை கொடுப்பேன் என்றும் கூறியுள்ளார். தன்னுடைய ரசிகர்கள்தான் தன்னுடைய பவர் என்று தெரிவித்துள்ள ரஹத், தான் அவர்களை மிகவும் நேசிப்பதாகவும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Read more about: dubai துபாய்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X