»   »  பக்கி பயலுக... எப்டியெல்லாம் பேர் வைக்கிறாங்க பாருங்க!

பக்கி பயலுக... எப்டியெல்லாம் பேர் வைக்கிறாங்க பாருங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்பெல்லாம் படம் ரிலீசாவதில் தான் சிக்கல் ஏற்பட்டது. ஆனால், இப்போதோ படத்திற்கு பெயர் வைக்கும்போதே ஆளாளுக்கு பிரச்சினைகளுடன் ஓடி வருகின்றனர்.

இதனாலேயே படத்திற்கு கதையைத் தேடுவதைப் போல், தலைப்பையும் ரூம் போட்டு யோசிக்கின்றனர் படக்குழுவினர்.

யாரும் யோசித்துப் பார்க்காத, பிரச்சினையில்லாத, அதே சமயம் மக்களுக்கு பிடித்தமான பெயர்களாக வைக்க வேண்டும் என மெனக்கிடும் அவர்கள், விதவிதமாக ஜாலி பெயர்களாக அறிமுகப் படுத்தி வருகின்றனர்.

பக்கி பயலுக...

பக்கி பயலுக...

அந்தவகையில், நாளை மறுதினம் ரிலீசாக இருக்கும் ஒரு படத்தின் பெயர் பக்கி பயலுக. வடிவேலு படத்தில் பெரும்பாலும் இந்த பக்கி என்ற வார்த்தையை சகஜமாகக் கேட்கலாம்.

புதுமுகங்கள்...

புதுமுகங்கள்...

இந்நிலையில், தற்போது இதையே தங்களது படத்திற்கு தலைப்பாக்கியுள்ளனர். பட போஸ்டரில் ஒரு முகமும் தெரிந்த மாதிரியில்லை. பெரும்பாலும் புதுமுகங்கள் நடித்துள்ள படம் இது.

படப்பிடிப்பு...

படப்பிடிப்பு...

இப்படத்தை ஸ்ரீ பெரியநாயகி அம்மன் பிலிம்ஸ் தயாரிக்க, கதை, திரைக்கதை, வசனம் எழுதி பாரதி இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு சேலம், ஆத்தூர், மேட்டூர், ஏற்காடு போன்ற பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது.

சேட்டை தான்...

சேட்டை தான்...

வாலு வச்ச குரங்கும் சரி, நாலு பேரும் சேர்ந்த கேங்கும் சரி எங்கே போனாலும் சேட்டைதான் என்று ஊர் சுற்றிக் கொண்டு திரியும் நான்கு இளைஞர்கள் வேலை தேடி சென்னை வருகிறார்கள். ஒரு பெண்ணால் அவர்களது முன்னேற்றம் தடைபடுகிறது. அதில் இருந்து மீண்டு எவ்வாறு வாழ்க்கை பாதையை அமைத்துக் கொள்கிறார்கள் என்பது இப்படத்தின் கதையாம்.

கவுண்டமணி காமெடி...

கவுண்டமணி காமெடி...

இந்த மாதிரியான படத்தலைப்புகளைக் கேட்கும் போது, வாயில் நுழைகிற மாதிரி பேர் என்றதும் வாழைப்பழம் என்பார்களே, அந்த கவுண்டமணி, செந்தில் காமெடி தான் ஞாபகத்திற்கு வருகிறது.

English summary
Pakki payaluga is an upcoming tamil film directed by Bharathi.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil