twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பக்கிரி விமர்சனம்: மிரட்டும் தனுஷ்.. குடும்பத்தோடு பார்க்கும் ஃபீல் குட் மூவி.. கொண்டாடும் ரசிகர்கள்

    |

    Recommended Video

    Pakiri Movie Audience Opinion: தனுஷ் நடித்துள்ள 'பக்கிரி' படம் எப்படி இருக்கு?- வீடியோ

    சென்னை: தனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான 'பக்கிரி' இன்று ரிலீசாகியுள்ளது. தனுஷின் முதல் ஹாலிவுட் என்ற பெருமிதத்துடன் வெளியாகியுள்ள இப்படத்தின் சிறப்பம்சங்கள் என்ன? படம் எப்படி இருக்கு? வாங்க ஒரு ரவுண்ட் போய் பார்க்கலாம்!

    பிரெஞ்சு நாவலான 'The Extraordinary Journey Of The Fakir Who Got Trapped In An Ikea Cupboard', என்பதுதான், ஹாலிவுட் படமாக உருவாகியுள்ளது.

    The Extraordinary Journey of the Fakir என்று இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ளார். கென் ஸ்காட் இயக்கியுள்ளார்.

    தமன்னாவுக்கு தான் ஓரங்கட்டிடுச்சு.. நயன்தாராவுக்காவது ஒர்க் அவுட் ஆகுமானு பார்க்கலாம்! தமன்னாவுக்கு தான் ஓரங்கட்டிடுச்சு.. நயன்தாராவுக்காவது ஒர்க் அவுட் ஆகுமானு பார்க்கலாம்!

    பக்கிரி

    பக்கிரி

    இந்தப் படம் ஆங்கிலம், தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளிவந்துள்ளது. தமிழில் இப்படத்துக்கு பக்கிரி என்று டைட்டில் கொடுக்கப்பட்டுள்ளது.

    இந்தியா மட்டுமின்றி, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா, வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளிலும்கூட, படம் வெளியாகியுள்ளது.
    கதை இதுதான்

    கதை இதுதான்

    மும்பையில், தந்தை யார் என்று தெரியாமல் தாயுடன் வாழ்ந்து வரும் கதாப்பாத்திரம் தனுஷுக்கு. ஆனால் திடீரென தனுஷின் தாய் இறந்துவிட அவருக்கு பாரீசில் இருக்கும் தந்தை அனுப்பிய கடிதம் கிடைக்கிறது. இதையடுத்து தந்தையை சந்திக்க பாரீஸ் பயணிக்கிறார் தனுஷ். கையில் பணம் இல்லாமல் ஒரு கடைக்குள் தூங்கிவிட, அவர் தூங்கிய பெட்டி இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கு பல பிரச்சினைகளை தனுஷ் சந்திக்கிறார். ஸ்பெயின், இத்தாலி நாடுகளுக்கும் தனுஷ் அலைக்கழிக்கப்படுகிறார்.

    சிறப்பான நடிப்பு

    சிறப்பான நடிப்பு

    முன்னதாக, பாரீசில் ஒரு பெண்ணுடன் காதல் வசப்படுகிறார் தனுஷ். வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலையில் சிக்கிவிடும் தனுஷ், காதலியை கரம் பிடிக்க முடிந்ததா, தந்தையை சந்திக்க முடிந்ததா என்பது மீதிக் கதை. கதை சிம்பிளாக இருந்தாலும், தனுஷின் நடிப்பு இந்த கதையை மெருகேற்றியுள்ளது.

    துருதுரு நடிப்பு, அப்பாவி போன்ற முகம், சென்டிமென்ட் சீன்களில் சோகம் என பல அவதாரங்கள் காட்டி பிரமிக்க வைத்துள்ளார் தனுஷ்.
    ஃபீல் குட் மூவி

    ஃபீல் குட் மூவி

    விடுமுறை நாளில் குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்துடன் சென்று, கூலாக ஒரு படம் பார்க்க விரும்புவோரின் தேர்வாக கண்டிப்பாக பக்கிரி இருக்கும். அப்படி ஒரு ஃபீல்குட் மூவி பக்கிரி. உட்கார்ந்த இடத்திலேயே உலகை சுற்றிப் பார்த்த ஃபீலிங்கை படம் கொடுப்பது மற்றொரு பிளஸ்.

    ரசிகர்கள் வரவேற்பு

    இன்று முதல் உலகமெங்கும். Kollywood , bollywood , தாண்டி இப்பொழுது hollywoodலும் கால் பதித்து தனது திறமையால் பக்கிரி என்னும் படைப்பை நமக்கு அளித்திருக்கிறார். வெள்ளி விழா கடந்து வைர விழா காண வாழ்த்துகிறோம். HOLLYWOOD ஸ்டார் தனுஷ் என்று வாழ்த்துகிறார் இந்த ரசிகர். ஆம். ஹாலிவுட் ஸ்டார் தனுஷ்தான்.

    English summary
    Pakkiri review is here, Dhanush a national award winning actor proves his acting talent once again in this Hollywood movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X