அருண் விஜய்யின் ’சினம்’ சீக்ரெட்டை வெளியிட்ட பாலக் லால்வாணி!
சென்னை: துருவங்கள் பதினாறு, நரகாசூரன் படங்களை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் மாஃபியா படத்தில் அருண் விஜய் நடித்துள்ளார்.
மாஃபியா படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், அந்த படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கும் அருண் விஜய், அடுத்ததாக தனது 30வது படத்தில் நடித்து வருகிறார்.

சினம் என தலைப்பிடப்பட்டுள்ள அந்த படத்தை இயக்குநர் ஜி.என்.ஆர். குமரவேலன் இயக்கி வருகிறார். சினம் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பாலக் லால்வாணி நடித்து வருகிறார்.
இந்நிலையில், சினம் படம் வழக்கமான போலீஸ் படமாக இருக்காது என்றும், வித்தியாசமான கதைக் களத்துடன் இயக்குநர் குமரவேலன் சினம் படத்தை இயக்கி வருகிறார் என்று சினம் படத்தின் நாயகி பாலக் லால்வாணி கூறியுள்ளார்.
தெலுங்கில் வெளியான அபயிதோ அம்மாயி, ஜுவ்வா படங்களில் நடித்த இவர், தமிழில் குப்பத்து ராஜா மற்றும் சிக்ஸர் படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.
சமுதாயத்தில் நடக்கும் குற்றங்களை கண்டும் காணாமல் செல்லும் மனிதனாக அல்லாமல், தப்பை தட்டிக் கேட்கும் காவல் அதிகாரியாக நடித்து வரும் அருண் விஜய்க்கு ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்ற கருவைக் கொண்டு சினம் உருவாகி வருவதாக பாலக் கூறியுள்ளார்.
இந்த படத்தில், தனக்கும் நல்ல ரோல் கிடைத்திருப்பதாகவும், சும்மா வந்து போகும் ஹீரோயின் வேடம் இல்லாமல், பவர்ஃபுல் ரோலில், தான் நடித்து வருவதாகவும் நிச்சயம் சினம் படம் தமிழில் தனக்கு நல்ல வரவேற்பை கொடுக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











