லோ நெக் டிரெஸ் போடவேக் கூடாது.. அந்த விஷயத்துல சல்மான் கான் இப்படித்தான்.. பிரபல நடிகை பளிச்!

மும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகர் சல்மான் கான் தனது ஷூட்டிங் ஸ்பாட்டில் பெண்கள் எப்படி டிரெஸ் போடணும் என்பதற்கு தனியாக ஒரு ரூல் புக்கே வைத்திருக்கிறார் என பேசி பரபரப்பை கிளப்பி உள்ளார் நடிகை பாலக் திவாரி.

சல்மான் கான், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி உள்ள கிஸி கா பாய் கிஸி கி ஜான் படம் வரும் ஏப்ரல் 21ம் தேதி வெளியாகிறது.

Palak Tiwari opens up Salman Khan had a rule against women wearing low necklines

அஜித் நடித்த வீரம் படத்தின் அதிகாரப்பூர்வமான ரீமேக் தான் இந்தப் படம். இந்நிலையில், அந்த படத்தில் நடித்த நடிகை பாலக் திவாரியே இப்படி பேசி இருப்பது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

லிப் கிஸ் பண்ணாத சல்மான் கான்: நடிகர் சல்மான் கான் மற்ற பாலிவுட் நடிகர்களை போல எல்லாம் கிடையாது. ஆன்ஸ்க்ரீனில் எப்போதுமே நடிகைகளின் உதட்டில் முத்தம் கொடுப்பதில்லை என்பதை கொள்கையாகவே வைத்திருக்கிறார். மேலும், ஏகப்பட்ட ரூல்கள் சினிமாவில் இருக்க வேண்டும் என்றும் பெண்களின் ஆடை விஷயத்திலும் அதிக கவனமும் செலுத்தி வருபவர் எனக் கூறுகின்றனர்.

வீரம் இந்தி ரீமேக்: கிஸி கா பாய் கிஸி கி ஜான் படம் விரைவில் வெளியாக போகிறது. அந்த படத்தில் சல்மான் கான் நீண்ட முடியுடனும் ஷார்ட் கட் ஹேர் உடனும் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும், ஷெனாஸ் கில், பாலக் திவாரி, வெங்கடேஷ் டகுபதி மற்றும் நட்புக்காக ராம்சரண் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

Palak Tiwari opens up Salman Khan had a rule against women wearing low necklines

சல்மான் கானை பற்றி பாலக் திவாரி: சல்மான் கான் நடிப்பில் வெளியான ஆண்டிம் படத்திலேயே உதவி இயக்குநராக பணியாற்றிய பாலக் திவாரி கிஸி கா பாய் கிஸி கி ஜான் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், ஷூட்டிங் ஸ்பாட்டில் பெண்கள் உடுத்தும் ஆடை குறித்து ஒரு ரூல் புக்கே சல்மான் கான் வைத்திருக்கிறார் என சமீபத்திய பேட்டி ஒன்றில் பாலக் திவாரி பேசி உள்ளார்.

லோ நெக் டிரெஸ் கூடாது: பெண்கள் யாரும் கழுத்துக்கு கீழே அங்கம் தெரியும் அளவுக்கு லோ நெக் உடையை உடுத்துக் கூடாது என்பதை கவனமாக பார்த்துக் கொள்வார் சல்மான் கான் என்றும் தனது ஷூட்டிங் ஸ்பாட்டில் வரும் பெண்களுக்கு மற்றவர்களால் எந்தவொரு சங்கடமும் வரக் கூடாது என்பதால் தான் அவர் இப்படி கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்கிறார் என பாராட்டி உள்ளார்.

Palak Tiwari opens up Salman Khan had a rule against women wearing low necklines

ஃபுல் சுடிதார் உடையில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு செல்லும் போது, என் அம்மாவே ஆச்சர்யமாக எங்கே போறன்னு கேட்பார், சல்மான் கான் சார் படத்தின் ஷூட்டிங்கிற்கு என்றதுமே ரொம்ப சந்தோஷம் என்பார் என பாலக் தீவாரி சல்மான் கான் பெண்கள் மீது காட்டும் அக்கறை குறித்து பேசி உள்ளார். சமீபத்தில் ஓடிடிக்கும் தணிக்கை வேண்டும் என்றும் அதிக ஆபாசமான படங்கள் வெளியாகக் கூடாது என்றும் சல்மான் கான் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X