»   »  ஜூலை 3ம் தேதி பாலக்காட்டு மாதவன் "காமெடி ராக்கெட்" தியேட்டர்களில் ஏவப்படுகிறது!

ஜூலை 3ம் தேதி பாலக்காட்டு மாதவன் "காமெடி ராக்கெட்" தியேட்டர்களில் ஏவப்படுகிறது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விவேக் நாயகனாக நடித்துள்ள படம் பாலக்காட்டு மாதவன், வரும் ஜூலை 3ம் தேதி ரிலீசாக உள்ளது.

சந்திர மோகன் இயக்கத்தில் விவேக் நாயகனாக நடித்துள்ள படம் பாலக்காட்டு மாதவன். இப்படத்தில் சோனியா அகர்வால் விவேக்கிற்கு ஜோடியாக நடித்துள்ளார்.


Palakkad Madhavan to hit screens on July 3

குடும்பக் கதை பிளஸ் காமெடிப் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியானது. சென்சாரில் இப்படத்திற்கு யு சான்றிதழ் தரப்பட்டுள்ளது.


Palakkad Madhavan to hit screens on July 3

இப்படம் முன்னதாக இம்மாதம் 26ம் தேதி ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, ரிலீஸ் தேதி ஜூலை 3ம் தேதிக்கு தள்ளி வைக்கப் பட்டுள்ளது.


இப்படத்தின் டிரைலர் மற்றும் இசைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. எனவே, படம் குறித்த எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகமாக உள்ளது.


ஏற்கனவே, நான் தான் பாலா படத்தில் விவேக் ஹீரோவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
There are a lot of expectations from actor Vivekh's next, Palakkad Madhavan, in which he plays the lead role. Now the official announcement has been made that the theatrical release of the film is locked on July 3.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil