விஜே சித்ராவை போல இன்னொரு இளம் சீரியல் நடிகை தற்கொலை.. பதறிப்போன திரையுலகம்.. நீடிக்கும் மர்மம்!

கொல்கத்தா: இளம் பெங்காலி டிவி நடிகை இன்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பல்லாபி தே எனும் பிரபலமான பெங்காலி நடிகை இன்று தூக்குப்போட்டுக் கொண்ட நிலையில், தனது வாடகை வீட்டில் கிடந்தது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தனது நண்பர் ஷாக்னிக் சக்கர்வர்த்தி உடன் வசித்து வந்த நிலையில், இப்படியொரு அசம்பாவீதம் ஏற்பட்டுள்ளது ஏகப்பட்ட கேள்விகளை எழுப்பி உள்ளது.

இளம் சீரியல் நடிகை

இளம் சீரியல் நடிகை

'அமிர் சிராஜேர் பேகம்' மற்றும் 'மன் மனே நா' உள்ளிட்ட பெங்காலி டிவி தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பல்லாபி தே. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தனது வீட்டை விட்டு தனியாக கொல்கத்தாவில் ஒரு ஃபிளாட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டு தனது நண்பர் ஷாக்னிக் சக்கரவர்த்தி உடன் வசித்து வந்துள்ளார்.

தற்கொலை

தற்கொலை

இந்நிலையில், மே 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இன்று அந்த வாடகை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட நிலையில், பல்லாபி பே இருந்ததை பார்த்து அவரது நண்பர் ஷாக்னிக் சக்கரவர்த்தி அதிர்ச்சியடைந்து போலீசில் தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நடிகையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சிகரெட் வாங்க போயிருந்தேன்

சிகரெட் வாங்க போயிருந்தேன்

ஒரே வீட்டில் இருவரும் ஒன்றாக இருந்து வரும் நிலையில், இருவரும் காதலித்தார்களா? உங்களுக்குள் என்ன பிரச்சனை, சம்பவம் நடந்த போது நீங்க என்ன பண்ணிட்டு இருந்தீங்க என போலீசார் கேட்டதற்கு, நாங்கள் இருவரும் வெறும் நண்பர்கள் மட்டும் தான் என்றும் சிகரெட் வாங்க கடைக்கு போயிட்டு வந்து பார்க்கும் போது அவர் தூக்கிட்ட நிலையில், தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ந்து போய்தான் புகார் அளித்தேன் என வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

மரணத்தில் மர்மம்

மரணத்தில் மர்மம்

நடிகைக்கு யாராவது விரோதிகள் உள்ளனரா? இல்லை வேறு ஏதாவது பிரச்சனையா? என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர். தற்கொலை என முதற்கட்டமாக போலீசார் பதிவு செய்துள்ள நிலையிலும், பிரேத பரிசோதனைக்கு பிறகு தான் அதனை உறுதி செய்ய முடியும் என்றும் கூறியுள்ளனர்.

திரையுலகம் அதிர்ச்சி

திரையுலகம் அதிர்ச்சி

பெங்காலி டிவி நடிகை திடீரென இப்படி மர்மான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடிகை உடன் பணியாற்றிய சக நடிகர்கள், நடிகைகள் மற்றும் சினிமா துறையினர் என பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

விஜே சித்ரா மரணம்

விஜே சித்ரா மரணம்

சின்னத்திரை நடிகை விஜே சித்ராவின் தற்கொலையும் மர்ம மரணம் என்றே தொடர்ந்து அவரது பெற்றோர்களால் கூறப்பட்டு வருகிறது. சமீபத்தில் அவர்கள் கொடுத்த பேட்டியில் கூட ஹேமந்த் தான் தனது மகளை கடித்தான் என்றும், மகளை கொன்றதும் ஹேமந்த் தான் தூக்குப் போட்டுக் கொண்டு இறந்து விட்டார் சித்ரா என கதை கட்டி விட்டார் என்றும் அழுது புலம்பிய காட்சிகள் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய நிலையில், அதே போன்றதொரு சம்பவம் கொல்கத்தாவில் இன்று அரங்கேறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X