அஜீத், சிம்புவுடன் டூயட் பாடப் போகும் புது ஹீரோயின் பல்லவி ஷர்தா!!
சிம்பு மற்றும் அஜீத் படங்களில் ஹீரோயினாகும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் மிஸ் இந்தியா ஆஸ்திரேலியா பட்டம் வென்ற பல்லவி ஷர்தா.
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு புதிய படம் இயக்கிக் கொண்டிருக்கிறார் கவுதம் மேனன்.

இப்போது சிம்புவை வைத்து ஒரு படத்தையும் அந்தப் படம் முடிந்த கையோடு அஜீத்தை வைத்து ஒரு படமும் இயக்குகிறார்.
இந்தப் படங்களில் பாலிவுட் நடிகை பல்லவி ஷர்தாவை தனது இரண்டு படங்களிலும் நடிக்க வைத்து ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கவிருக்கிறார்.
இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டு பிறகு ஆஸ்திரேலியாவில் குடியேறிய தம்பதிகளுக்கு மகளாய் பிறந்தவர் பல்லவி ஷர்தா.
நடிப்பில் மட்டுமல்லாமல் பரத நாட்டியத்தையும் கற்றுக் கொண்ட பல்லவி ஷர்தா 2010-ல் 'மிஸ் இந்தியா ஆஸ்திரேலிய'அழகியாக பட்டம் பெற்றவர். சமீபத்தில் வெளியான 'பேஷ்ராம்' திரைப்படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடித்திருந்த பல்லவி ஷர்தாவின் நடிப்பைப் பார்த்து கௌதம் மேனன் அவரைத் தேர்ந்தெடுத்தாராம்.
பாலிவுட் நடிகையை தமிழில் அறிமுகப்படுத்துவதோடு, தனது அடுத்தடுத்த இரு படங்களுக்கும் 'சல்லிசாக' ஒப்பந்தம் செய்துவிட்ட கவுதம் மேனன் கில்லாடிதான் என்கிறது கோலிவுட்.


Click it and Unblock the Notifications











