பல்லு படாம பாத்துக்க.. ஓரினசேர்கையாளராக நடிக்கிறார் ஜெகன்!

சென்னை : பல்லு படாம பாத்துக்க படத்தில் ஓரின சேர்க்கையாளராக நடிக்கிறார் ஜெகன்.

Recommended Video

படம் முழுக்க மீம்ஸ் தான் | VIJAY VARADHARAJ,SHIV SHAARAH INTERVIEW | V-CONNECT | FILMIBEAT TAMIL

டெம்பிள் மங்கீஸ் யூடியூப் சேனலின் நடிகர் மற்றும் நிறுவனரான விஜய் வரதராஜ் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் படம் தான் பல்லு படமா பாத்துக்க.

இந்த படம் வரும் மார்ச் 13 வெளியாகுகிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது. இதில் படக்குழு கலந்து கொண்டு பல விசயங்களை பகிர்ந்து கொண்டனர் .

 ஜகன்

ஜகன்

இந்த படத்தில் ஐகன் ஓரினச்சேர்க்கையாளராக நடித்து இருக்கிறாராம். தமிழ் சினிமாவில் பல படங்களில் ஓரினச்சேர்க்கையாளர்களை கேலி செய்து பல படங்கள் வந்திருக்கின்றன. எல்லா சமூக பிரச்சனைகளையும் வேறு கண்ணோட்டத்தில் பார்க்கும் விஜய் வரதராஜ் இதை எப்படி படத்தில் காட்டிருப்பார் என்ற எதிர்பார்ப்பு பலரிடமும் இருக்கிறது .

 18 பிளஸ் படம்

18 பிளஸ் படம்

மேலும் இந்த படம் முழுக்க முழுக்க 18 ப்ளஸ் படமாக தான் உருவாகியிருக்கிறதாம் . இந்த படத்தில் ஆபாசமாக உடலை காட்டும் காட்சிகள் ஏதும் இல்லையாம் ஆனால் ஆபாச வசனங்கள் படம் முழுக்க இருக்கிறது என்று படக்குழு கூறியிருக்கிறது. இந்த படத்திற்காக டெல்லிக்கு சென்று தணிக்கை சான்றிதழ் மிகவும் சிரமப்பட்டு வாங்கியதாக படக்குழு தெரிவித்து.

 முதல் பார்வை

முதல் பார்வை

இணையத்தில் முதல் பார்வை மற்றும் முன்னோட்டம் வெளியாகியது முதல் பல இணைய ரசிகர்கள் இந்த படத்தை பற்றி பேச துவங்கிவிட்டார்கள். ஏனெனில் இணையத்தில் டெம்பில் மங்கீஸ் குழுவுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருந்தது தான் காரணம் . இந்த கதையை இயக்குனர் விஜய் வரதராஜ் 2015லே எழுதி விட்டாராம். மிக பெரிய கால அளவு படமெடுக்க தேவைப்பட்டிருக்கிறது என்று கூறினார். மேலும் ஒரு கல்யாண விழாவில் ஜகனை சந்திக்கும் போது இந்த கதையை அவரிடம் கூறி அப்போதே அவரை ஓகே சொல்ல வைத்து விட்டாராம் இயக்குனர் விஜய் வரதராஜ்

 காம நெடி காமெடி

காம நெடி காமெடி

படத்தில் ஆபாச காமெடிகள் முழுக்க முழுக்க நிரம்பியிருக்கிறது. இருந்தும் படம் பல காமெடிகளுக்கு இடையே வலுவான கருத்தை பேசியிருக்கிறது என்று படக்குழுவால் கூறப்பட்டிருக்கிறது . அடெல்ட் காமெடி படங்கள் பல சமீப காலமாக அதிகமாக வந்து கொண்டிருக்கிறது. இந்த டிரெண்டை கையில் எடுத்து கொண்டு படத்தை இயக்கியிருக்கிறார் விஜய் வரதராஜ். இதற்கு முன் வந்த அடெல்ட் காமெடி படங்கள் பெருவாரியான ரசிகர்களை முகம் சுளிக்கவே வைத்து இருக்கிறது அதே போல் இந்த படமும் இருக்குமா அல்லது மனதில் நிற்குமா என்பதனை மார்ச் 13 தெரிந்து கொள்ளலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X