பல்லு படாம பாத்துக்கோ.. என்னடா பேரு வைக்கிறீங்க.. குடும்பத்தோட எப்படி பார்க்க முடியும்??

சென்னை: பல்லு படாம பாத்துக்க படத்தின் பெயருக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. டெம்பிள் மங்கீஸ் என்ற யூட்யூப் சேனல் மூலம் பிரபலமானவர் விஜய் வரதராஜ். இவர் இயக்கியுள்ள படம்தான் பல்லு படாம பாத்துக்க.

Recommended Video

படம் முழுக்க மீம்ஸ் தான் | VIJAY VARADHARAJ,SHIV SHAARAH INTERVIEW | V-CONNECT | FILMIBEAT TAMIL

இந்தப் படத்தில் அட்டக்கத்தி தினேஷ் மற்றும் சஞ்சிதா ஷெட்டி ஆகியோர் லீடிங் ரோலில் நடித்துள்ளனர். மேலும் விஜய் வரதராஜ், விஜய் டிவி ஜெகன், ஷாரா, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர்.

அடல்ட் வசனங்கள்

அடல்ட் வசனங்கள்

இந்தப் படம் வரும் 13 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் படத்தின் ஸ்னீக் பீக் வெளியானது. அதன் மூலம் நடிகர் ஜெகன், இதில் ஓரின சேர்க்கையாளராக நடித்துள்ளார் என்பது தெரியவந்தது. ஓரின சேர்க்கையாளர்களை நக்கலடிக்கும் வகையில் இருந்ததோடு முழுக்க முழுக்க இரட்டை அர்த்த அடல்ட் வசனங்கள் இடம் பெற்றுள்ளன.

டீசரின் இறுதி காட்சி

டீசரின் இறுதி காட்சி

இதனை தொடர்ந்து கடந்த மாதம் படத்தின் டீசர் வெளியானது. இதிலும் காது கூசும் அளவுக்கு இரட்டை அர்த்த வசனங்களே இடம் பெற்றிருக்கிறது. அடல்ட் காமெடி படம் என படக்குழு தெரிவித்தாலும் படத்தின் பெயரே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதற்கேற்றார் போல் டீசரின் இறுதியில் வரும் காட்சி படு கேவலமாக உள்ளது.

முகமூடியுடன்

முகமூடியுடன்

படத்தின் பெயரை சொல்லும் டயலாக்குடன் படு மோசமாக அந்த காட்சி படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் பெயரிலேயே படம் எப்படி இருக்கும் என்று தெரிகிறது. தங்களின் யூட்யூப் சேனலில் புரட்சிகரமான கருத்தை பேசும் விஜய் வரதராஜ், இப்படி ஒரு தலைப்புடன் இந்த படத்தை எடுத்து, தான் வெளியில் முகமூடியுடன்தான் சுற்றுகிறேன் என நிரூபித்துள்ளார்.

ஓட்டம் பிடித்திருக்க வேண்டாமா?

ஓட்டம் பிடித்திருக்க வேண்டாமா?

அடுத்து படத்தின் ஹீரோ அட்டக்கத்தி தினேஷ். இதுவரை நல்ல நல்ல படங்களை தேர்வு செய்து நடித்த அட்டக்கத்தி தினேஷ், திடீரென இப்படி ஒரு குப்பை கதையில் எப்படி சிக்கினார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். படத்தின் பெயரை கேட்டவுடனேயே ஓட்டம் பிடித்திருக்க வேண்டாமா? என்கின்றனர் ரசிகர்கள்.

என்ன இருக்கப் போகுது?

என்ன இருக்கப் போகுது?

படம் ஸாம்பி படத்தை ஒத்து இருப்பதாக டீசரில் தெரிகிறது. படத்திற்கு தேவை என்பதால் இப்படி ஒரு பெயரை வைத்திருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படி ஒரு கேவலமான பெயரின் மூலம், படத்தில் என்ன சமூகம் சார்ந்த கருத்தா இருக்கப் போகிறது? என்றும் சமூகத்திற்கும் இளைய சமுதாயத்திற்கும் தேவையான முக்கிய சோஷியல் மெஸேஜையுமா சொல்லியிருக்கப் போகிறார்கள் என்கின்றனர் ரசிகர்கள்.

கத்தரி போட்டிருக்க வேண்டாமா?

கத்தரி போட்டிருக்க வேண்டாமா?

படத்தில் பலான காட்சிகளும் வசனங்களுமே நிறைந்திருக்கிறது என்பது டீசரை பார்த்தாலே தெரிகிறது. இப்படி ஒரு டைட்டிலை வைத்த படக்குழுவை கண்டித்து கையோடு டைட்டிலுக்கே சென்சார்போர்டு கத்தரி போட்டு தூக்கியிருக்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அண்மையில் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்ற போது கூட பத்திரிக்கையாளர்களின் காரசார கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறியது படக்குழு என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X