Just In
- 41 min ago
மாஸ்டர் மகேந்திரனின் ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’… டிரைலரை வெளியிடும் 2 பிரபலங்கள் !
- 55 min ago
டைம் டிராவல் கதை.. உருவாகிறது 'இன்று நேற்று நாளை 2' ஆம் பாகம்.. பூஜையுடன் ஷூட்டிங் தொடக்கம்!
- 1 hr ago
பிக்பாஸ் வீட்டில் கடைசி வரை இருந்த பாலாஜிக்கு இவ்வளவுதான் சம்பளமா? தீயாய் பரவும் பட்டியல்!
- 3 hrs ago
அக்ரிமென்டை வைத்து மிரட்டியதா விஜய் டிவி? சுரேஷ் சக்கரவர்த்தியின் டிவீட்டால் ரசிகர்கள் ஷாக்!
Don't Miss!
- Sports
ரோகித், கில் சிறப்பான துவக்கத்தை தரணும்... பந்த் தொடர்ந்து ஆடணும்... பாண்டிங் அறிவுரை
- News
மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல்... 2 தொகுதியில் போட்டி... மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு
- Lifestyle
இந்த 5 ராசிக்காரங்களுக்கு வயசுக்கு மீறின புத்திசாலித்தனம் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Finance
முகேஷ் அம்பானியின் அதிரடி திட்டம்.. சவால் விடும் வாட்ஸப் + ஜியோமார்ட் கூட்டணி..!
- Automobiles
தானாகவே ஓடும்... இந்தியாவிற்கு வரவுள்ள டெஸ்லா கார் பற்றிய இந்த விஷயங்களை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க...
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பல்லு படாம பாத்துக்க.. அட இது படம் பேரு சார்.. கலக்க வரும் இன்னும் ஒரு யூடியூப் கலைஞர்!
சென்னை : தினேஷின் பல்லு படாம பாத்துக்க படத்தின் முதல் பார்வை மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது.
பல்லு படாம பாத்துக்க படத்தை யூடியூப்பில் இருந்து சினிமாவில் கால் பதித்திருக்கும் விஜய் வரதராஜ் இயக்கி இருக்கிறார் இந்த படத்தில் தினேஷ் , சஞ்சிதா ஷெட்டி, சாரா, நான் கடவுள் ராஜேந்திரன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்து இருக்கின்றனர் .

பல்லு படாம பாத்துக்க படத்தின் முதல் பார்வை மோஷன் போஸ்டராக வெளியாகியுள்ளது. இந்த படத்தை டெம்பில் மங்கீஸ் யூடியூப் சேனலின் நிறுவனர், நடிகர் மற்றும் இயக்குனர் விஜய் வரதராஜ் இயக்கி இருக்கிறார். இவரை நாம் ஜீவி.பிரகாஷின் இவனுக்கு இன்னொரு பேர் இருக்கு படத்தில் நாயகனின் நண்பனாக பார்த்திருப்போம் .
யூடியூப் தளத்திலிருந்து தற்சமயம் பல இளைஞர்கள் சினிமாத்துறையில் சாதித்து வருகின்றனர். தற்போது அதிலிருந்து வந்திருக்கும் மற்றொரு கலைஞர் தான் விஜய் வரதராஜ். தமிழ் யூடியூப்பின் மிக பழைய சேனல் என்று இணைய ரசிகர்களால் அழைக்கப்படும் டெம்பில் மங்கீஸ் சேனலை துவங்கி பல போராட்டங்களுக்கு பிறகு இயக்குனர் ஆகியிருக்கிறார் விஜய் வரதராஜ் .
இந்த படம் முழுக்க முழுக்க ஒரு கற்பனை கதையான ஜாம்பி கதையாக உருவாகியிருக்கிறது. இந்த மோஷன் போஸ்டரில் ஜாம்பிகள், நாஷி படைகள் மற்றும் துப்பாக்கியுடன் நாயகன் தினேஷ் இடம் பெற்றுள்ளார். கடைசியாக ஒரு நடிகை கவர்ச்சி மிகுந்த ஆடையுடன் படுத்திருப்பது போல முதல் பார்வை வடிவமைக்கபட்டிருக்கிறது .
விஜய் வரதராஜிற்கு முன்பே பிளாக் ஷீப் இயக்குனரான கார்த்திக் சினிமாவில் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா எனும் படம் மூலம் கால் பதித்து இருக்கிறார. தற்போது விஜய் வரதராஜ் அடுத்ததாக புட் சட்னி ராஜ்மோகனும் ஒரு படத்தை இயக்க போகிறார். மறுமுனையில் எரும சானி குழு மூலம் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்ற படம் எடுக்கபட்டு வருகிறது
சமீபத்தில் 83 படத்தில் நடித்தது மூலம் பிரபலமடைந்த ஆர்.பத்ரி டெம்பில் மங்கீஸ் குழுவின் ஒரு நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஹீரோ படத்தில் வக்கீல் கதாபாத்திரம் விவசாயி கதாபாத்திரம் என நடித்தவர்களும் டெம்பில் மங்கீஸ் குழுவினர் தான் மற்றும் தற்போது நல்ல நகைச்சுவை கலைஞராக பாராட்டபட்டு வரும் சாராவும் டெம்பில் மங்கீஸ் குழுவை சேர்ந்தவர் தான். இதனால் டெம்பில் மங்கீஸ் விஜய் வரதராஜின் பல்லு படாம பாத்துக்க படமும் பெரிய அளவில் எதிர்பார்க்கபட்டு வருகிறது.