Just In
- 6 min ago
என் பரம்பரையிலேயே முதல் கார்.. எங்க அம்மா அழுதுட்டாங்க.. குக் வித் கோமாளி 2 புகழ் உருக்கம்!
- 17 min ago
பாலிவுட் மெகா ஸ்டார்களுடன் கைகோர்க்கும் பிரபாஸ்...பிரம்மாண்டமாக தயாராகும் அதிரடி
- 1 hr ago
100 மில்லியன் வியூஸ்களை கடந்த செல்லம்மா பாடல்.. ஜாலி மோடில் சிவகார்த்திகேயன் ஷேர் செய்த வீடியோ!
- 2 hrs ago
கர்ணன் படத்தின் அடுத்த அப்டேட்.. அசத்தலாய் அறிவித்த தனுஷ்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
Don't Miss!
- Automobiles
வெறும் ரூ.50,000 மட்டுமே... ஹைதராபாத்தில் டெலிவிரி துவங்கியது ஆட்டம் 1.0 எலக்ட்ரிக் பைக்!!
- Sports
புலம்பறதையும் புகார் சொல்றதையும் விடுங்க... என்ன செய்யறதுன்னு யோசிங்க... ரிச்சர்ட்ஸ் அறிவுரை!
- News
இந்திய விவசாயிகள் ஒடுக்கப்படுவது கவலையளிக்கிறது.. மலாலா யூசுப்சாய் பேச்சு
- Education
ரூ.84 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் IIFCL நிறுவனத்தில் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Finance
9 மாத சரிவில் சீன உற்பத்தி துறை.. கடும் பாதிப்பில் வேலைவாய்ப்பு சந்தை..!
- Lifestyle
2020 ஆம் ஆண்டில் சாதித்த மிகவும் சக்தி வாய்ந்த இந்திய பெண்கள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இன்னொரு ஜாம்பியா? போதும்டா சாமி.. பல்லு படாம பாத்துக்க மோஷன் போஸ்டர் ரிலீஸ்!
சென்னை: இருட்டு அறையில் முரட்டு குத்து படத்துல ஆரம்பிச்ச அடல்ட் ஆட்டம், தமிழ் சினிமாவில் எல்லை மீறிக் கொண்டே போகிறது.
டெம்பிள் மங்கிஸ் புகழ் விஜய் வரதராஜா இயக்கத்தில், அட்டகத்தி தினேஷ், சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் உருவாகி உள்ள 'பல்லு படாம பாத்துக்கோ' படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகி டிரெண்டாகி வருகிறது.
கடந்த ஆண்டு பரிதாபங்கள் கோபி, சுதாகர், யோகி பாபு மற்றும் யாஷிகா ஆனந்த் நடிப்பில் ஜாம்பி எனும் படம் வெளியாகி செம்ம மொக்கை வாங்கியது.
ஆதியோகியே காப்பாற்று.. இந்தியன் 2 விபத்து அதிர்ச்சியில் இருந்து மீள இஷா யோகா மையம் சென்ற காஜல்!
மோஷன் போஸ்டர் ரிலீஸ்
இந்நிலையில், டெம்பிள் மங்கிஸ் இயக்குநர் விஜய் வரதராஜா இயக்கத்தில், அட்டகத்தி தினேஷ், சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் அடுத்த ஜாம்பி படமாக உருவாகி உள்ள பல்லு படாம பாத்துக்கோ படத்தின் மோஷன் போஸ்டர் ரிலீஸ் ஆகி உள்ளது. இன்று மாலை டீசர் ரிலீசாகும் என்ற அறிவிப்புடன் வெளியாகி டிரெண்டாகி வருகிறது.

ஆபாசமான தலைப்புகள்
இந்த மாதிரி எல்லாம் தலைப்பு வைத்து தமிழ் சினிமாவில் படங்கள் வெளியாகும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அந்தளவுக்கு, தற்போது, மிகவும் ஆபாசமான தலைப்புகளுடன் அடல்ட் படங்கள் வெளியாகி வருகின்றன. மேலும், அடல்ட், காமெடி, ஹாரர் என மூன்றையும் மிக்ஸ் பண்ணி, ரசிகர்களை கடுப்பேற்றுகின்றனர்.

டெம்பிள் மங்கிஸ்
பிளாக்ஷிப், புட் சட்னி, பரிதாபங்கள், எருமை சாணி என பல யூடியூப் சேனல்கள், சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது டெம்பிள் மங்கிஸ் யூடியூப் குழுவில் இருந்து சினிமா இயக்குநராக விஜய் வரதராஜா இந்த படத்தின் மூலம் அறிமுகமாகிறார். டெம்பிள் மங்கிஸ் யூடியூப் வீடியோக்களிலேயே, ஆபாச வசனங்கள் நிறைந்திருக்கும் இப்போ இந்த படம் எப்படி வரப் போகுதோ..

இன்னொரு ஜாம்பி
வெளிநாடுகளில் அடித்து துவைத்த ஜாம்பி படக் கதையை, ஜெயம் ரவி, லக்ஷ்மி மேனன் நடிப்பில் உருவான மிருதன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கொண்டு வந்தனர். அந்த படம், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. கடந்த ஆண்டு புவன் நல்லன் இயக்கத்தில், யாஷிகா ஆனந்த், யோகி பாபு நடிப்பில் வெளியான ஜாம்பி படமும் படு தோல்வி அடைந்தது. இந்நிலையில், இன்னொரு ஜாம்பி படமாக இந்த படம் உருவாகி உள்ளது.

அட்டகத்தி தினேஷ்
இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு என்ற அற்புதமான படத்தில் நடித்த நடிகர் தினேஷ், அடுத்ததாக விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் தேரும் போரும் என்ற படத்தில் நடிக்கிறார் என்ற அறிவிப்பு நேற்று வெளியாகி பாராட்டுக்களை பெற்றது. இந்நிலையில், தற்போது, பல்லு படாம பாத்துக்கோ படத்தில் தினேஷ் நடித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

டீசர் ரிலீஸ்
பல்லு படாம பாத்துக்கோ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி டிரெண்டாகி வருகிறது. மேஜிக் ரேஸ் தயாரிப்பில், விஜய் வரதராஜா இயக்கத்தில், அட்டகத்தி தினேஷ், சஞ்சிதா ஷெட்டி நடிப்பில், உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. நாஜி கொடி, அந்த இடத்தில் டைட்டில் என அடுத்த அடல்ட் ஆட்டத்திற்கு படக்குழு தயாராகி உள்ளது.