எல்லாத்துக்கும் காரணம் அவங்கதான்.. செம ரகளை செய்ய வராங்க பல்லு படாம பாத்துக்க படக்குழு!
சென்னை: பல்லு படாம பாத்துக்க படத்தின் இயக்குநர் விஜய் வரதராஜ் மற்றும் காமெடி நடிகர் ஷாரா கொடுத்துள்ள பேட்டியின் புரொமோ வீடியோ வெளியாகி உள்ளது.
Recommended Video
டெம்பிள் மங்கிஸ் எனும் யூடியூப் சேனல் மூலம் பிரபலமானவர்கள், விஜய் வரதராஜ் மற்றும் ஷாரா.

ஜி.வி. பிரகாஷின் கடவுள் இருக்கான் குமாரு உள்ளிட்ட சில படங்களில் காமெடியனாக நடித்துள்ள விஜய் வரதராஜ், தற்போது இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.
அட்டகத்தி தினேஷ், சஞ்சிதா ஷெட்டி மற்றும் ஷாரா நடிப்பில் அடல்ட் காமெடி ஜாம்பி படமாக இந்த படம் உருவாகி உள்ளது.
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை தொடர்ந்து, மற்றுமொரு இரட்டை அர்த்த வசன டைட்டிலுடன் உருவாகி உள்ள இந்த படம் இளைஞர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல்லு படாம பாத்துக்க படத்தின் இயக்குநர் விஜய் வரதராஜ் மற்றும் காமெடி நடிகர் ஷாரா, நமது ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியின் புரொமோ வீடியோ தற்போது ரிலீஸ் ஆகியுள்ளது.
இந்த புரொமோ வீடியோவில், பல்லு படாம பாத்துக்க படத்தின் டீசர் டிரெண்டிங் ஆனதற்கு, முக்கிய காரணமே, தங்களுடைய டெம்பிள் மங்கிஸ் யூடியூப் சேனல் ரசிகர்கள் தான் என இயக்குநர் விஜய் வரதராஜ் கூறியுள்ளார். வீடியோவை காண லிங்க்கை க்ளிக் செய்யுங்க.


Click it and Unblock the Notifications











