ஜாம்பி.. சஞ்சிதா ஷெட்டி.. ஆபாச வசனம்.. மொக்கை காமெடி.. பல்லு படாம பாத்துக்க டீசர் எப்படி இருக்கு?

சென்னை: டெம்பிள் மங்கிஸ் யூடியூப் சேனல் மூலம் பிரபலமான விஜய் வரதராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள பல்லு படாம பாத்துக்க படத்தின் டீசர் ரிலீஸ் ஆகியுள்ளது.

அட்டகத்தி தினேஷ், சஞ்சிதா ஷெட்டி, ஷா ரா, ஜெகன், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படத்தின் மோஷன் போஸ்டர் இன்று காலையில் வெளியாகி டிரெண்டானது.

அடல்ட் காமெடி

அடல்ட் காமெடி

இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி படங்களின் வரிசையில், இன்னொரு அடல்ட் காமெடி படமாக இந்த பல்லு படாம பாத்துக்க உருவாகி உள்ளது. இது போன்ற ஆபாசமான வசனங்களை இரட்டை அர்த்த வசன கேட்டகரியில் எப்படித் தான் சேர்க்கிறார்களோ என்பது தெரியவில்லை.

காமெடியாவது இருக்குமா?

காமெடியாவது இருக்குமா?

இப்போதெல்லாம் வரும் புதிய படங்களில், கோபம் வருகிற மாதிரி தான் காமெடி காட்சிகள் வருகின்றன. மனம் விட்டு சிரித்த நகைச்சுவை காட்சிகள் எல்லாம் மலையேறி போய் ரொம்ப காலம் ஆகிவிட்டது. இந்த படத்தின் டீசர் கூட அந்த வரிசை காமெடி படமாகத் தான் இருக்கும் என்பதை உணர்த்துவது மேலும் கொடுமை.

டீசர் எப்படி இருக்கு?

ஏதோ ஜுமான்ஜி படத்தில் வருவது போல, நாலு பேர் நாலு விதமாகவும், கிளாமருக்கு சஞ்சிதா ஷெட்டியும் அவர்களுடன் சேர்ந்து, காட்டுப் பகுதியில் எதையோ தேடி போகின்றனர். அங்கே, இருக்கும் ஜாம்பிகள் இவர்களை கடித்து விடாமல் தப்பிக்க அந்த ஜாம்பிகளின் பல்லு படாம பாத்துக்கிட்டாங்களா இல்லையா என்பது போல இருக்கு டீசர்.

ஆபாச வசனங்கள்

ஆபாச வசனங்கள்

டீசரின் ஆரம்ப காட்சியில் ஆரம்பிக்கும் ஆபாச வசனம், டீசர் நெடுகிலும், பல இடங்களில், வசனங்களாகவும் காட்சிகளாகவும் நீள்கின்றன. காமெடி எனும் பெயரில், ஷா ரா, மொட்டை ராஜேந்திரன், தினேஷ் செய்வது எல்லாம் கடுப்பைத் தான் கிளப்புகிறது. கடந்த ஆண்டு வெளியான ஜாம்பி படத்தை மீண்டும் எடுத்து வைத்தது போல தெரிகிறது. வரட்டும் பார்ப்போம்.

இப்படியே போனால்..

இப்படியே போனால்..

ஆடை படத்தில் அமலா பால் நிர்வாணமாக நடிக்கிறார். தமிழ் சினிமா படங்களில், ஆபாச வசனங்கள் தாண்டவம் ஆடுகின்றன. சென்சார் போர்டெல்லாம், அரசியல் படங்களுக்கு மட்டும் தான் சென்சார் செய்கின்றனவா? என்ற கேள்வியும் எழுகின்றது. தாராள பிரபு, பல்லு படாம பாத்துக்கோ என இப்படியே போனால், அடுத்த 5 ஆண்டில், ஏ சர்டிபிகேட் படங்கள் மட்டும் தான் வெளியாகும் எனத் தெரிகிறது. அதையாவாது உருப்படியா எடுங்களேன் பாஸ் என்ற ஏக்கமும் எழுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X